பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்; இப்படி செய்தாலே போதும்…!
பொதுவாகவே அனைவரது வீட்டிலும் பண கஷ்டம் என்பது அதிகமாகவே இருக்கும். சிலருக்கு திடீர் என வேலை போகும்..சிலர் நோய் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவத்திற்கு பணம் செலவழிப்பார்கள்.
ஏன் இப்படி பண கஷ்டம் வருகிறது என்பது பற்றி யோசிக்க முடியாத அளவிற்கு மாறி மாறி பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும்.
தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் காரியங்கள் நமக்கு சில நேரங்களில் கஷ்டங்களை ஏற்படுத்தி விடும்.
இந்த பிரச்சினைகளில் இருந்து விடுப்படுவதற்காக பலரும் பல விதமான பரிகாரங்களை செய்வார்கள். அவ்வாறு பணத்தின் சக்தியை ஈர்க்கக்கூடியது தான் பச்சை கற்பூரம். அது எவ்வாறு வீட்டில் பணப்புழக்கத்திற்கு உதவுகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது.
பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டால் நல்லது.
2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிப்படலாம்.
பச்சை கற்பூரத்தில் இருக்கும் வாசணையால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கும்.
பணம் இருக்கும் இடத்தில் வைக்கும்போது, அங்கு வரும் எதிர்மறையான சக்திகள் நீங்கும்.
பச்சை கற்பூரத்தை ஒரு கடதாசியில் மடித்து பேர்ஸில் வைத்தாலும் நல்லது.
வீட்டில் நடக்கும் சுப காரியத்தின் போது இதை பயன்படுத்தலாம்.
கல்லாப்பெட்டி, பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் வைக்கலாம்.
குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வங்களையும் வணங்கி, ஒரு போத்தலில் அடைத்து வைத்தாலு நல்லது.