Green Tea: உடல் எடையைக் குறைக்க ஒவ்வொரு முறை உண்டபின்னும் கிரீன் டீ குடிக்க வேண்டுமா?: ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன?
உடல் எடையைக் குறைக்க ஒவ்வொரு முறை உண்டபின்னும் கிரீன் டீ குடிக்க வேண்டுமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன என்பது பற்றி அறியலாம்.
கிரீன் டீ சமீபத்திய தசாப்தங்களில் சிறந்த சூப்பர்ஃபுட்களில் ஒன்றாகவும், எடை இழப்புக்கான சக்திவாய்ந்த அமுதமாகவும் உருவெடுத்துள்ளது.
கிரீன் டீ குடிப்பது உடல் எடையைக் குறைப்பதில், உடற்பயிற்சிக்கு முன் அல்லது ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. பலர் தங்கள் எடை இழப்பை விரைவுபடுத்த குறைந்தது மூன்று கப் கிரீன் டீயை உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் கிரீன் டீ குடிப்பது உண்மையில் உடல் எடையைக் குறைக்க ஒரு உறுதியான வழியா? என்பதை ஒரு ஊட்டச்சத்து நிபுணர் விளக்குகிறார்.
கிரீன் டீ அற்புதமான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. எடை இழப்பு பயணத்தை ஆதரிப்பதில் இதை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் அவர்கள் கிரீன் டீயின் அதிகப்படியான கவலை, எரிச்சல் மற்றும் தூக்கமின்மையை உருவாக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கிரீன் டீயின் நன்மைகள்
கிரீன் டீயில் இருக்கும் மூலக்கூறுகள், நோர்பைன்ப்ரைன் போன்ற சில உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களைத் தூண்ட உதவுகின்றன.
கிரீன் டீ சாறுகளை உட்கொள்வது நீங்கள் தூங்கும்போது கூட அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. கிரீன் டீயை தவறாமல் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது கலோரிகளைக் குறைக்க மறைமுகமாக உதவுகிறது.
உடல் எடையை குறைக்க கிரீன் டீ உதவுமா, கிரீன் டீ குடித்தால் எவ்வளவு உடல் எடையை குறைக்க முடியும் என்று எடை குறைப்பு பயணத்தில் அனைவரும் கேட்பது வழக்கமான கேள்வி. கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. எனவே ஒருவர் தினசரி உணவில் கிரீன் டீயை நிச்சயமாக சேர்க்கலாம் என்று அகமதாபாத்தின் செரிமான மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் ஸ்ருதி கே பரத்வாஜ் கூறுகிறார்.
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் கிரீன் டீ குடிக்க வேண்டுமா?
ரொம்ப ஹெவியாக சாப்பிட்டபின், சிலர் ஏன் கிரீன் டீ குடிக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது உண்மையில் உடல் எடையைக் குறைக்க உதவுமா? என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா கூறியதாவது:
உணவுக்குப் பிந்தைய செரிமான உதவி:
கிரீன் டீ ஜீரணிக்க உதவுவதில் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக நன்கு ஹெவியாக சாப்பிட்டபின், அதைக் குடித்தால் உடலில் செரிமான செயல்திறனை மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் பத்ரா கூறுகிறார்.
எடை இழப்பு அதிசயமா?
இருப்பினும், எடை இழப்பு இலக்குகளை அடைய கிரீன் டீயை மட்டுமே நம்ப வேண்டும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர் பத்ரா ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் இது கலோரிகளை குறைப்பதற்கான மந்திர சூத்திரம் அல்ல என்கிறார்.
“கிரீன் டீ உடலில் இருக்கும் பவுண்டுகளைக் கரைக்க உதவுகிறதா இல்லவே இல்லை. இது உடலில் கொழுப்பு எரிப்பை சற்று அதிகரிக்கக்கூடும் என்றாலும் (கேடசின்கள் மற்றும் காஃபினுக்கு நன்றி), இந்த விளைவுகள் ஒப்பீட்டளவில் மிதமானவை” என்று அவர் கூறுகிறார்.
நினைவாற்றல் உணவு மற்றும் விரைவான திருத்தங்கள்
நினைவில் கொள்ளுங்கள், எந்த ஒரு உணவு அல்லது பானமும் தானாகவே எடை இழப்பிற்குத் தீர்வாகாது. உங்கள் உணவுக்குப் பிந்தைய செரிமானத்தில் ஜீரணத்தை அதிகரிப்பது போன்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக கிரீன் டீயை குடிக்கலாம். ஆனால் அதை எடை இழப்புக்கான அருமருந்து என கருதவேண்டாம் என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் பத்ரா.