பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில் குடிங்க.. அப்புறம் பாருங்க
நீர் சத்து இருக்கும் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பார்கள், அதிலும் குறிப்பாக வெயில் காலங்களில் இந்த நீர் சத்துள்ள பதார்த்தங்களையும் பழங்களையும் எடுத்துக் கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
இந்த நீர் சத்து காய்கறிகளான வெண் பூசணிக்காய், சுரக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய், சௌ சௌ, வெள்ளரிகாய் உள்ளிட்ட காய்களில் வெள்ளரியை தவிர்த்து மற்ற காய்களை சில வீடுகளில் சமைப்பது கூட இல்லை.
அப்படியிருக்கும் போது எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்? ஆனால் எந்த காய்கறிகளையும் தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள், மூதாதையர்களின் அறிவுரையாக இருக்கிறது. அந்த வகையில் வெண் பூசணிக்காய் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது.
சிறுநீர்ப்பையின் செயல்பாடுகளை ஊக்குவித்தது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இருமல், சளி போன்றவைகளுக்கும் இது அருமருந்தாகிறது. வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை சரி செய்கிறது. இந்த பூசணிக்காய் பார்ப்பதற்குத்தான் மிகவும் பெரிதாக இருக்கும்.
ஆனால் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால் நீர்ச்சத்து அதிகம். இதனால் இது எடை குறைப்பில் அதிக பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றும். நீர் சத்து அதிகம் இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உடல் சூட்டை தணிக்கும். வயிற்றுக்கு இதமானது. அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பூசணிக்காயில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. மேலும் தியாமின், ரிபோஃபிளேவின் போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த பூசணிக்காய் உடல் சோர்வை போக்கும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யும்.
கெட்ட பாக்டீரியாக்களை அழித்து குடலை சுத்தமாக வைத்திருக்கிறது. இந்த பூசணிக்காயில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையை நீக்கும். மனம் பதற்றம் போன்ற பிரச்சினைகளை குறைத்து மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. பெண்களுக்கு அதிக வெள்ளைப்படுதலையும் குறைக்கும்.
இதற்காக ஒரு ஜூஸ் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
வெள்ளை பூசணி- தோல் நீக்கியது
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
பூண்டு- 5 பல் உரித்தது
உப்பு – சிறிதளவு
எலுமிச்சை பழச்சாறு- சிறிதளவு
புதினா இலைகள்- 10