Groundnut Kuruma : நிலக்கடலை குருமா – டிபஃனுக்கு ஏற்ற சைட் டிஷ்!
தேவையான பொருட்கள்
நிலக்கடலை – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
சோம்புத் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
தேங்காய் – அரை முடியில் பாதி,
ஏலக்காய், கிராம்பு, பட்டை – தலா 1
முந்திரி (அ) பாதாம் – 12
புதினா, மல்லித் தழை – ஒரு கைப்பிடி
எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு
செய்முறை
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரங்கள் ஊற வைக்கவேண்டும்.
தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவேண்டும். முந்திரி மற்றும் தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிக்க வேண்டும்.
பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கியயுடன், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் சோம்புத் தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளி, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவேண்டும். நன்கு வதங்கியவுடன் நிலக்கடலையை நீரை வடித்துவிட்டுச் சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு 3 விசில்கள் வரும் வரை வேகவிட்டு இறக்கி வைக்கவேண்டும்.
குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் அரைத்த தேங்காய் முந்திரியைச் சேர்த்து பிரட்டி இரண்டு கொதி வந்ததும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கிவிடவேண்டும்.
பரோட்டா, பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட ருசியான நிலக்கடலை குருமா ரெடி.
குறிப்பு – பச்சைக் கடலையை ஊற வைக்கக்கூடாது. அதை வறுத்து எடுத்து தான் ஊற வைக்கவேண்டும். அதுதான் நல்ல ருசியாக இருக்கும்.
இது வித்யாசமான சுவையில் அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது நிச்சயம் பிடிக்கும் ஒரு குருமாவாக இருக்கும்.