நாவில் எச்சில் ஊற வைக்கும் பிஸ்கட் குலாப் ஜாமூன்… இந்த பிஸ்கட் இருந்தால் போதும்
பொதுவாகவே அனைவரும் காரமான உணவுகளை விட இனிப்பான உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் பலரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு பண்டம் என்றால் அது குலாப் ஜாமூனாக தான் இருக்கக்கூடும்.
வைத்து எப்படி எளிய முறையில் பிஸ்கட் குலாப் ஜாமூன் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிஸ்கட் – 2 பாக்கெட்
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
பால் – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பிஸ்கட்டை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
அதில் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கலந்து கொதிக்க வைக்கவும்.
பிறகு பாலுடன் அரைத்து வைத்த பிஸ்கட் சேர்த்து குலாப் ஜாமூன் போன்று உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
இறுதியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பொறித்துக்கொள்ளவும்.
பின் அதை சர்க்கரை கரைசலுடன் ஊற வைத்து ருசித்து பார்த்தால் தித்திக்கும் குலாப் ஜாமூன் தயார்.