உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறைக்க குரு ராகவேந்திரர் 108 போற்றிகள்..!
குரு பகவான், தட்சிணாமூர்த்தி, சித்தர்கள், மகான்களை வழிபடுவதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை.வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று ராகவேந்திரரின் திருவுருவப் படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து, வாசனை மலர்களை கொண்டு ராகவேந்திரரின் திருஉருவ படத்தினை அலங்கரிக்க வேண்டும். ஒரு தாம்பூலத்தில் துளசி இலைகளையும், வாசனை மிகுந்த பூக்களையும் உதிரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மகானின் திருவுருவப் படத்திற்கு முன்பு அமர்ந்து மனதார உங்கள் வேண்டுதல்களை நினைத்து ஒரு நிமிடம் வேண்டி, உதிரிப் பூக்களை தூவி அர்ச்சனை செய்து இந்த 108 போற்றிகளை உச்சரித்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறைந்துவிடும். உங்களுக்கான ராகவேந்திரரின் போற்றிகள் இதோ.
ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பகவிருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி
ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் பக்தப் பிரயனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி
ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்யமவத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி
ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி
ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
ஓம் கண்னனின் தாசனே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி
ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையர் தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவானரே போற்றி
ஓம் சங்கு கர்ணரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஒம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா இறைவனே போற்றி
ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி