Guru: குருவின் ஆசி பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்
நவகிரகங்களின் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் வெளியிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கொடுப்பார் என கூறப்படுகிறது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி என்று வக்ர நிவர்த்தி அடைந்தார்.
இந்த 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் மே மாதம் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.
இந்த இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும் இதனால் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும். இருப்பினும் குரு பகவானுக்கு பிடித்தமான சில ராசிகள் உள்ளன.
எந்த கால சூழ்நிலையிலும் இந்த ராசிக்கு அவர் நல்ல பலன்களை கொடுப்பார் என கூறப்படுகிறது அந்த வகையில் குரு பகவானுக்கு எப்போதும் பிடித்தமாக இருக்கும் அந்த ராசிகளை இங்கே காண்போம்.
தனுசு ராசி
குருபகவான் ஆசி பெற்ற ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் இந்த கால சூழ்நிலை வந்தாலும் உங்களுக்கு நன்மை செய்வதில் குரு பகவான் முனைப்பாக இருப்பார். எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு வறுமை சிக்கல்கள் வராத அளவிற்கு குரு பகவான் காத்து நிற்பார். பொதுவாகவே தனுசு ராசிக்காரர்கள் அறிவாற்றலில் சிறந்தவர்களாக இருப்பார்கள் அதனால் உங்களுக்கு சிக்கல்கள் வருவது மிகவும் குறைவு. இப்போதும் உங்களை மனநிறைவோடு குரு பகவான் வைத்திருப்பார்.
மீன ராசி
பொதுவாகவே எந்த சிக்கல்களிலும் ஈடுபடாத ராசிக்காரர்களாக நீங்கள் உள்ளீர்கள். அதனால் உங்களுக்கு எப்போதும் எந்த சிக்கலும் ஏற்படாது. அதற்கு காரணம் குரு பகவானின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும். என்பதுதான் ராகு பகவானின் தாக்கம் உங்கள் ராசியில் அதிகமாக இருப்பது. கிடையாது ஏனென்றால் குரு பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு உள்ளது. அதிஷ்டத்தின் ஆதரவை குருபகவான் உங்களுக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டே இருப்பார். பெரிய சிக்கல்களில் இருந்து உங்களை குரு பகவான் காத்து நிற்பார்.