கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு..!!

திருவனந்தபுரம்:பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று இரவு கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் வரவேற்றனர்.பிரதமரின் வருகையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலுக்கு அதிகாலை முதலே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் வந்தடைந்த மோடி, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார், அங்கு நூற்றுக்கணக்கான பா.ஜ.க. ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அவரை வரவேற்க மணிக்கணக்கில் திரண்டனர்.
இந்நிலையில், குருவாயூரப்பன் கோவிலில் பிரதமர் பாரம்பரிய உடையான ‘முண்டு’ மற்றும் வெள்ளை சால்வை அணிந்து பிரார்த்தனை செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்.கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவில், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய உலர் கப்பல்துறை ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.