தங்கலான் பாடலை லீக் செய்த ஜிவி பிரகாஷ்.. வேற லெவல் சம்பவம்
நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக உள்ளார். இவரது பல படங்களில் தன்னுடைய தோற்றத்தையே மாற்றிக் கொண்டு நடித்து மிரள வைத்துள்ளார். ஐ, சேது உள்ளிட்ட படங்கள் இவரது இந்த உழைப்பிற்கு உதாரணங்களாக உள்ளன. சேது படமே இவருக்கு சிறப்பான அறிமுகத்தை தமிழில் கொடுத்துள்ளது. முன்னதாக சில படங்களில் நடித்திருந்தாலும் சேது படத்தில் இவர் ஏற்று நடித்த சியான் கேரக்டரின் பெயராலே தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அந்தப் படத்தில் துவங்கிய இவரது வெற்றிப்பயணம் தற்போதுவரை தொடர்ந்
மிரட்டலான டீசர்: விக்ரமின் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. படத்தில் இளைஞர் மற்றும் முதியவர் கேரக்டர்களில் சியான் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தில் நடித்துள்ள பிரியங்காவிற்கும் சண்டை காட்சிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பார்வதி, பசுபதி ஆகியோரும் நடித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜனவரி 26ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பாடலை லீக் செய்த ஜிவி பிரகாஷ்: இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் அந்த காலகட்டத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் மேடையேறி பேசிய ஜிவி பிரகாஷ், இந்தப் படத்தின் தங்கலான் பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் பாடல் இன்னும் வெளியிடப்படாத நிலையில் அவர் இந்தப் பாடலை ரசிகர்களிடையே லீக் செய்துள்ளார். இந்தப் பாடல் ஆயிரத்தில் ஒருவன் படப் பாடல்களை போல வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ளது தெரிகிற
விக்ரமின் அடுத்தப்படம்: தங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரமின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமாருடன் விக்ரம் இணையவுள்ளார். இந்தப் படம் அவரது 62வது படமாக உருவாகவுள்ளது. படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.ஆர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கும் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். சித்தா படத்தை போலவே இந்தப் படமும் உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட