Habits Of Celebrities: தீபிகா முதல் பிரியங்கா வரை.. இவங்களுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கா? – வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பாலிவுட்டின் சாக்லேட் பாய் என்று அழைக்கப்படுபவர் ரன்பீர் கபூர். தன்னுடன் நடித்த சக நடிகையான அலியா பட்டை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு ராஹா கபூர் என்று பெயர்வைக்கப்பட்டது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படமும் பம்பர் ஹிட்டடித்தது. இப்படி சென்சேஷனலாக இருக்கும் ரன்பீருக்கு கால் பந்து விளையாட்டு என்றால் கொள்ளை பிரியமாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால்பந்தை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவாராம்.
கத்ரீனா கைஃப்பிற்கு அறிமுகமே தேவையில்லை. அனைத்து மொழிகளிலும் நன்கு பரீட்சையமான இவர், விஜய்சேதுபதியுடன் கைகோர்த்து மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
அம்மணிக்கு உடம்பை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதில் அதிக பிரியம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆர்கானிக்கான உணவுகளை தன்னுடைய உணவில் சேர்த்துக்கொள்வாராம்.
பதான், ஜவான் என தொடர்ந்து ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்து ஹிட் லிஸ்ட் பட்டியலில் இருக்கும் தீபிகா படுகோன், அடுத்ததாக கிருத்திக் ரோஷனுடன் இணைந்து ஃபைட்டர் படத்தில் நடித்திருக்கிறார்.
ரன்வீர் சிங்கின் மனைவியான இவருக்கு வித்தியாசமான ஸ்டேஷனரி பொருட்களை வாங்கி குவிப்பது என்றால் அவ்வளவு இஷ்டமாம்.
பாலிவுட்டே வேண்டாம் என்று ஹாலிவுட்டில் செட்டில் ஆன பிரியங்கா சோப்ராவிற்கு எல்லாம் சுத்தபத்தமாக இருக்க வேண்டுமாம். ஹோட்டல் ரூம்களை அலங்கரிப்பதில் அம்மணி கிங் என்று சொல்லப்படுகிறது.
அசால்ட்டாக பெரிய கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய அலியா பட்டிற்கு, தன்னுடைய எண்ணங்களை, அனுபவங்களை டைரியில் எழுதி வைக்கும் பழக்கம் இருக்கிறதாம்.
நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவிற்கு விலங்குகள் என்றால் கொள்ளை பிரியம். வீட்டிலும் விலங்குகளை வளர்த்து வரும் இவர் விலங்குகளுக்காக குரல்களையும் கொடுத்து வருகிறார்.
ரன்வீர் சிங்கிற்கு ஃபேஷன் என்றால் உயிர். எங்கு சென்றாலும் அவர் அணிந்துருக்கும் ஆடை, கம்மல் என அணிந்து வரும் ஒவ்வொன்றும் கவனம் பெறும். அதுவே அவரது ஸ்டைல் ஸ்டேட்மெண்டாகவும் மாறியிருக்கிறது.