சிக்ஸர் மழையில் அரைசதம்! விஸ்வரூப ஆட்டம் காட்டிய ஹெட்மையர்
ஷார்ஜா அணிக்கு எதிரான போட்டியில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக அரைசதம் விளாசினார்.
கிறிஸ் லின் 45
துபாயில் நடந்து வரும் இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற ஷார்ஜா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கல்ஃப் அணி முதலில் ஆடியது.
ஜேமி ஸ்மித் 7 ஓட்டங்களில் அவுட் ஆக, அதிரடியில் மிரட்டிய கிறிஸ் லின் 45 (32) ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் கேப்டன் வின்ஸ் 20 ஓட்டங்களிலும், ஜோர்டான் கோக்ஸ் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஹெட்மையர் ருத்ர தாண்டவம்
அதன் பின்னர் வந்த ஹெட்மையர் ருத்ர தாண்டவம் ஆடினார். மறுமுனையில் எரஸ்மஸ் 17 (11) ஓட்டங்களும், ஓவர்டன் 25 (15) ஓட்டங்களும் விளாசினர்.
கடைசிவரை களத்தில் நின்ற ஹெட்மையர் 28 பந்துகளில் 53 ஓட்டங்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
ஷார்ஜா தரப்பில் சியான் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும், சாம்ஸ், வோக்ஸ் மற்றும் ஜவாதுல்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.