தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இந்த தேதியில் வெளியிடப்படும்..!

தமிழக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 19-ம்தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்களின் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். என கூறப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *