ஹமாஸ் படைகள் பிடியில் மகள்… லண்டன் உதவி கேட்டு அச்சத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல் தந்தை

ஹமாஸ் படைகளிடம் பணயக்கைதியாக உள்ள மகள் வன்கொடுமைக்கு இலக்காகலாம் என்று அஞ்சுவதாக இஸ்ரேலிய தந்தை ஒருவர் மனம் திறந்துள்ளார்.

உண்மை தெரியும்

ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளுக்கு உண்மை தெரியும் என்றும், ஆனால் தமது துயரத்தை அதிகப்படுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் எதையும் தம்மிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்றும் Eli Albag தெரிவித்துள்ளார்.

இப்படியான வலியால் தாம் நடைபிணமாக வாழ்வதாக குறிப்பிட்டுள்ள Eli Albag, மருந்து மாத்திரிகளால் மட்டுமே தமது துயரத்தை கட்டுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் நடத்திய அக்டோபர் 7 தாக்குதலின் போது கடத்தப்பட்ட 130 க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இஸ்ரேல் கூறி வருகிறது. மட்டுமின்றி, நவம்பர் இறுதியில் ஆறு நாள் போர் நிறுத்தத்தின் போது 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்டவர்களில் 10 பெண்கள்

விடுவிக்கப்பட்ட சில பணயக்கைதிகள், தாங்கள் வன்கொடுமைக்கு ஆளானதை மற்ற பெண் பணயக்கைதிகள் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறியுள்ளனர்.

மட்டுமின்றி, விடுவிக்கப்பட்டவர்களில் 10 பெண்கள் வன்கொடுமைக்கு அல்லது துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக பரிசோதனை செய்த மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே தங்கள் உறவினர்களை விடுவிக்கும் பொருட்டு கத்தார் அரசுக்கு அழுத்தமளிக்க, பிரித்தானியாவிடம் முறையிட லண்டனுக்கு சென்றுள்ள நான்கு குடும்பத்தினரில் Eli Albag என்பவரும் ஒருவர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *