இஸ்ரேலிய பணயக்கைதிகள் காணொளியை வெளியிட்டு… தலைவிதியை அறிவிப்போம் என்ற ஹமாஸ்
காஸா மீதான தாக்குதலை நிறுத்தும் கோரிக்கையுடன் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவரின் காணொளி ஒன்றை ஹமாஸ் படைகள் வெளியிட்டுள்ளது.
போர் தொடர்பில் கோரிக்கை
குறித்த காணொளியில், இஸ்ரேல் அரசாங்கத்திடம் அவர்கள் போர் தொடர்பில் கோரிக்கை வைப்பதுடன், தங்களை மீட்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர். காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் தொடங்கி 100 நாட்களை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ஞாயிறன்று ஹமாஸ் வெளியிட்டுள்ள 37 நொடிகள் கொண்ட காணொளி ஒன்றில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மூவர் போர் நிறுத்தும்படி தங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.
அந்த காணொளியின் இறுதியில், இவர்களின் தலைவிதியை நாளை அறிவிப்போம் என முடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காஸா மீது இஸ்ரேலியப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதால் சில பணயக்கைதிகளுடனான தொடர்பை இழந்ததாக ஹமாஸ் கூறியது, அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஹமாஸ் படைகள் குறிப்பிட்டது.