சுத்தி சுத்தி அடிவாங்கும் ரேமண்ட் கௌதம் சிங்கானியா..விவாகரத்துக்கு மத்தியில் ரூ.328 கோடி அபராதம்..!!

ந்தியாவின் மிகப்பெரிய ஆடை மற்றும் டெக்ஸ்டைல் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா 2023 ஆம் ஆண்டின் இந்திய வர்த்தக உலகின் மிக முக்கிய பேசு பொருளாக மாறினார்.தனது மனைவி உடனான விவாகரத்துப் பதிவு தொடர்ந்து, அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் ரோட்டில் உட்கார வைத்தது, கௌதம் தனது மனைவி மற்றும் மகளை அடித்தது, கௌதம்-ன் தந்தை பேசியது, கௌதம் மனைவி நவாஸ் மோடி அவருடைய சொத்தில் 75 சதவீத பங்கீட்டைக் கேட்டது எனப் பல பிரச்சனைகளை அவரைச் சுத்தி சுத்தி அடித்தது.
இதைத் தொடர்ந்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) தொடுத்து ஒரு வழக்கின் தீர்ப்புத் தற்போது ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா-வுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எதற்காக இந்த வழக்கு, அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது எதற்காக..?ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா, ஆர்வமுள்ள கார் சேகரிப்பாளர், கும்பல்லா ஹில் ஜேகே ஹவுஸில் கார் அருங்காட்சியகத்தைத் திறக்க திட்டமிட்டார். இதற்காக Sothebys, Barret-Jackson மற்றும் Bonhams உட்பட உலகெங்கிலும் உள்ள டாப் ஏல நிறுவனத்தில் இருந்து சுமார் 138 பழங்காலக் கார்கள் மற்றும் நான்கு R&D நிலையில் இருக்கும் பிரத்தியேக வாகனங்களை வாங்கினார்.அன்றே கணித்தார் விஜய்-யின் வாரிசு பட இயக்குனர்.. ரேமண்ட் குடும்பத்தில் நடப்பது இதுதானா..!ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட இடைத்தரகர்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட உயர் மதிப்புக் கொண்ட சொகுசு சக்கரங்களைச் சிங்கானியா தலைமையிலான ரேமண்ட் குழுமம் விலை குறைத்து மதிப்பிட்டு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்தது.இதைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தீவிர விசாரணையை மேற்கொண்டது. முதலில் 229.72 கோடி ரூபாய் அளவிலான சுங்க வரி மற்றும் வரிகளை ஏய்ப்பு தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் விசாரணையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையும், வரி ஏய்ப்பு அதிகமானது.வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 142 கார்களுக்குப் பயனாளி மற்றும் உரிமையாளராகக் கவுதம் சிங்கானியாவை அடையாளம் கண்டு உறுதி செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) வழக்கை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றது.இதில் 142 கார்களை இறக்குமதி செய்த ரேமண்ட் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் கௌதம் சிங்கானியா டிஆர்ஐ வழக்கைத் தீர்ப்ரின் படி ரூ.328 கோடி அபராதம் செலுத்தினார். இந்த அபராதத்தை ரேமண்ட் குழுமத்தின் கிளை நிறுவனமான ஜேகே இன்வெஸ்டர்ஸ் மீது விதிக்கப்பட்டு உள்ளது, 15% வரி வித்தியாசம் மற்றும் வட்டி ஆகியவற்றைச் சேர்த்து 328 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.பாத்ரூம்-க்காக மனைவி, மகளை அடித்த Raymond குழும தலைவர் கௌதம் சிங்கானியா.. கொடுமையிலும் கொடுமை..!2018-2021 க்கு இடையில் ஏலத்தில் வாங்கப்பட்ட கார்களுக்கு, வெளிநாடுகளில் உள்ள பென்டிமி எஃப்இசட்சி, அல்மாஸ்கன் டிரேடிங் எல்எல்சி, ட்ரூமேக்ஸ் லிமிடெட் மற்றும் ஆர்க்கிட் எச்கே லிமிடெட் ஆகிய நிறுவனத்தால் கார்களின் விலை குறைத்துப் பில் செய்யப்பட்டது. இப்படித் தான் விண்டேஜ் கார்களைச் சுங்க வரி ஏய்ப்புச் செய்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *