கட்டுக்கட்டாக பண நோட்டுகள்: பொலிஸாரிடம் சிக்கிய குட்டி புத்தர்-யார் இவர்?
பாலியல் தொந்தரவு வழக்கில் நேபாளத்தின் ராம் பஹதூர் போம்ஜான் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குட்டி புத்தர்
நேபாளத்தில் ஆசிரமம் நடத்தி வந்த ராம் பஹதூர் போம்ஜான் என்பவர் தன்னுடைய சீடர்களால் `Buddha Boy’ என்று அழைக்கப்படுகிறார். இவரது ஆசிரமத்தில் பல பெண்கள் சீடராகவும், சிஷ்யையாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில் Buddha Boy என சீடர்களால் அறியப்படும் ராம் பஹதூர் போம்ஜான் மீது சில பெண் சீடர்கள் மற்றும் பக்தர்கள் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அத்துடன் ஆசிரமத்தில் வைத்து 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டும் Buddha Boy மீது முன்வைக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மடக்கி பிடித்த பொலிஸார்
பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வர தொடங்கியதை அடுத்து 2010ல் 10க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
இவர்களை தொடர்ந்து 18 வயது கன்னியாஸ்திரி ஒருவரும் பாலியல் புகார் கொடுத்தார். இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதே வேளையில் ஆசிரமத்தில் இருந்து 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் திடீரென மாயமாகினர், இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ராம் பஹதூர் போம்ஜான் காத்மாண்ட் புறநகர் பகுதியில் உள்ள இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தை பொலிஸார் சுற்றி வளைத்தனர், இருப்பினும் வீட்டின் ஜன்னலில் இருந்து கீழே குதித்து ராம் பஹதூர் போம்ஜான் தப்பிக்க முயன்றார்.
இருப்பினும் அவரை மடக்கி பிடித்து பொலிஸார் கைது செய்துள்ளனர், மேலும் அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக நோபாள நாட்டின் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.