ஹனுமன் ஜெயந்தி..! இப்படி வழிபட்டால் நீண்ட காலம் நிறைவேறாத வேண்டுதல் உடனே பலிக்குமாம் தெரியுமா?

ஸ்ரீ ராமரின் தீவிர பக்தனாக விளங்கும் அனுமனை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இன்னல்கள் என்பது இடை வராது. இத்தகைய மகா சக்திகளை கொண்டுள்ள ஹனுமன் ஜெயந்தி வருகின்ற வெள்ளிக்கிழமை அமாவாசை திதியில் நிகழவிருக்கிறது. இன்றைய நாளில் நீங்கள் ஹனுமனை எப்படி வழிபட்டால் நினைத்ததை அடையலாம்? என்கிற ஆன்மீகம் சார்ந்த எளிய வழிபாட்டு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள். அனுமனை ‘ராம’ நாமம் சொல்லி வழிபடுபவர்களுக்கு செய்வினைகள் அண்டாது. தீய சக்திகள் விலகி ஓடும். காத்து கருப்பு போன்ற பிரச்சனைகளும் நெருங்காது. பகை ஒழிந்து, சங்கடங்கள் தீர, சனி பெயர்ச்சியிலிருந்து விடுபடவும், சனி தோஷங்கள் நீங்கவும் ஹனுமன் ஜெயந்தி அன்று மறக்காமல் அனுமனை துளசி தீர்த்தம் வைத்து வழிபடலாம்.

வீட்டில் ஹனுமருடைய படத்தை வாசலில் மாட்டி வைத்தால் திருஷ்டிகள் அகலும். வாஸ்து சார்ந்த பிரச்சனைகளும் நீங்குவதாக நம்பப்படுகிறது. வீட்டில் வாஸ்து கோளாறினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறைய பஞ்சமுக ஹனுமனை வழிபடுங்கள். துளசி மாலை சாற்றி அனுமன் ஜெயந்தி அன்று ஹனுமனுக்கு பிடித்த நைவேத்தியங்கள் ஆக இருக்கக்கூடிய அவல், பொரி, கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், இளநீர், பழங்கள், பானகம், வாழைப்பழம், வடை போன்றவற்றை வைத்து வழிபடலாம்.

கோவிலுக்கு வடை மாலை, வெற்றிலை மாலை போன்றவற்றையும் அனுமனுக்கு சாற்றி பக்தர்களுக்கு தயிர் சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். தீராத ஆசைகளும், வேண்டுதல்களும் மனதில் இருப்பவர்கள் ஹனுமன் ஜெயந்தி அன்று கண்டிப்பாக அனுமன் கோவிலுக்கு சென்று அல்லது ராமர் கோவிலுக்கு சென்று அனுமனை வழிபடுங்கள். மேலும் ஹனுமன் வழிபாடு செய்பவர்களுக்கு விரைவில் மனதிற்கு பிடித்த நபர்களுடன் திருமணம் நடைபெறும். பேச்சுலராக இருக்கக்கூடியவர் திருமணத்தை நடத்தி வைப்பாரா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் ஸ்ரீ ராமரை மனதில் கொண்டுள்ள இவரை நாம் மனதார வழிபட்டால் நினைத்தவர்களுடன் மனம் முடித்து வைக்கக்கூடிய அற்புதமான கடவுளாகவும் இவர் இருந்து வருகிறார்.

கல்விக் கடவுளாக விளங்கக்கூடிய இவரை அனுமன் ஜெயந்தி அன்று பிள்ளைகள் தங்கள் கைகளால் ஸ்ரீ ராம ஜெயம் என்கிற நாம மந்திரத்தை 108 முறை உச்சரித்து எழுதி அதை மாலையாக கட்டி அனுமனுக்கு சாற்றி வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கலைகள் யாவிலும் வெற்றி காணக்கூடிய வாய்ப்புகளை பெற்று தரும். படிப்பிலும், தேர்விலும் நீங்கள் நல்ல பலன்களை காணக்கூடிய யோகம் உண்டாகும்.

குழந்தை இல்லா தம்பதியர்கள் புத்திர பாக்கியம் பெறுவதற்கு துளசி மாலையுடன் வடை மாலை சாற்றி அனுமனை வழிபடுங்கள். மேலும் வழக்குகளில் வெற்றி அடையவும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். மேலும் வெண்ணை பிரியராக இருக்கக்கூடிய அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் அந்த வெண்ணையைப் போலவே உருகி அவர் நம் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றிக் கொடுப்பாராம். எனவே அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள். துளசி தீர்த்தம் வையுங்கள். ராம என்கிற இரண்டெழுத்து மந்திரத்தை அன்றைய நாள் முழுவதும் உச்சரித்து நற்பலன்களை பெறுங்கள். செல்வ விருத்தி உண்டாக குபேர வீர ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *