Hanuman Movie Review: ஹனுமன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
பிரசாந்த் வர்மாவின் சினிம டிக் யுனிவர்சில் வெளியாகியிருக்கும் முதல் படம் இது. ஹனுமனை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சூப்பர் ஹீரோ படமான ஹனுமன் படத்தில் தேஜா சஜ்ஜா, அமிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வெண்ணிலா கிஷோர், வினை, தீபக் ஷெட்டி, சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஹனுமன் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் கூடியது,ஒட்டி படம் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் வில்லனான வினை சிறுவயதில் இருந்து சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை பார்த்து அதே போல மாற முயற்சி செய்கிறார், இதை கண்டித்த தனது தாய் மற்றும் தந்தையையும் சிறு வயதிலேயே கொலை செய்து விடுகிறார். பின்பு அறிவியலின் உதவியுடன் இயந்திர சூட் மூலம் தன்னை சூப்பர் ஹீரோவாக மாற்றிக் கொள்கிறார், இருப்பினும் இயற்கையாகவே சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும் என்று ஒவ்வொரு ஆராய்ச்சிகளாக செய்கிறார் வினை. மறுபுறம் ஹீரோ தேஜா சஜ்ஜாவிற்கு திடீரென சூப்பர் பவர் கிடைக்கிறது. இந்த விஷயம் வில்லன் வினைக்கு தெரிய வருகிறது, பின்பு அவரது கிராமத்திற்கு சென்று அந்த சக்தியை அடைய நினைக்கிறார். இறுதியில் என்ன ஆனது? அந்த சக்தி அவருக்கு கிடைத்ததா இல்லையா? என்பதே ஹனுமன் படத்தின் கதை.