ஹேப்பி போகி : மாசு இல்லா போகி கொண்டாடுவோம்!

மிழகத்தின் பிரதான தொழிலான விவசாயம், நெசவு ஆகியவற்றிக்கு ஊக்கம் அளிக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள், போகி கொண்டாப்படுகிறது.

 

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி அன்று, பழைய பொருட்கள் அகற்றி, அவற்றிக்கு பதிலாக, புதிய பொருட்களை இடம் பெறச் செய்வார்கள்.

இதற்காக, நம் மக்கள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் சேகரித்து, பெரும்பாலும் வீதியில் போட்டு எரிப்பார்கள். இதனால் மாசு ஏற்படுகிறது என்று, அரசு பல கோடிகள் செலவு செய்து மாசு இல்லாத போகி கொண்டாடச் சொல்லி பிரச்சாரம் செய்கிறது.

வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து விடுவது என்பது, நம் தத்துவதின் குறீயீடுதான். உண்மையில், போகி அன்று அகற்ற வேண்டிய மாசு, நம் உள்ளத்தில் தான் இருக்கிறது. இதைத் தான் நம் முன்னோர்கள் கூறினர்.

உள்ளத்தின் அழுக்கை எப்படி அகற்ற வேண்டும் என்பதை திருவள்ளுவர் .சொல்லித் தருகிறார்.
‘புறத்துாய்மை நீரான் அமையும் அகத்துாய்மை
வாய்மையால் காணப் படும்’ என்கிறார் அவர்.

எளிதில் புரியும் இந்த குறள் போல, வாய்மையை கடைபிடித்தால், அகம் துாய்மையடையும். அதன் பின்னர் பொங்கல் வைத்தால் மகிழ்ச்சி பொங்கும்.

அந்த வாய்மை என்றால் என்ன என்றும் திருவள்ளுவரே சொல்லித் தருகிறார்.

‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்’ என்றார்.

அதாவது, யாருக்கும் தீமை ஏற்படாத வகையில் சொல்வதே ஆகும். இது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் இவற்றிக்கு இடம் கொடுக்காத போது மட்டும் தான், வாய்மை உள்ளத்தில் வந்து அமரும்.

இந்த ஆண்டு முதலாவது, நம் மனதில் எழும் தேவையற்ற ஆசைகள், பொறாமை, பகை உணர்ச்சி ஆகியவற்றை களைந்து, சிறப்பான தை திருநாளை வரவேற்போம்.

பொங்கல் அன்று மட்டும் அல்ல எதிர்காலம் முழுவதும் நம் வீட்டிலும், நாட்டிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என உறுதியேற்று, அதன்படி சிந்தித்து செயல்படுவோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *