இல்லத்தரசிகள் ஹேப்பி..! 160 …160..160… தங்கம் விலை குறைவு..!

ரியல் எஸ்டேட் மற்றும் பங்குகளுடன் ஒப்பிடும்போது தங்கத்தை வாங்குவதும் விற்பதும் மிகவும் எளிதானது. சிறிய நகரங்களில் இருக்கும் பலருக்கு பங்குகளை பற்றி எதுவும் தெரியாது. ஆனால், தங்கம் என்றால் என்ன? அதை எப்படி விற்பது? எப்படி வாங்குவது? என்பது அவர்களுக்கு நன்றாக‌ தெரியும்.

இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவதும், அதை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவதும் தான் தங்கத்தை பதுக்க முக்கிய காரணமாகும். திருமணங்கள் அல்லது முக்கிய விழாக்களின் போது தங்கத்தை வாங்கி, பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தங்கம் விலை எதுவாக இருந்தாலும், தங்கத்திற்கு இந்தியாவில் தனி இடம் இருப்பதை மறுக்க முடியாது.

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே செல்வது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் தொடந்து 3 நாட்களாக 160,160,160 என மொத்தம் 480 ரூபாய் குறைந்துள்ளது.பிப்ரவரி 2 ஆம் தேதி 47120 என விற்ற தங்கம் ஒரு சவரன் விலை தற்போது 46640 க்கு விற்பனையாகிறது .

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து, ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ரூ.46,640-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,792-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் குறைந்து, ரூ.4,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 76,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *