வங்கி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மொத்தமாக பணம் கொட்டப்போகுது..!
வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.இந்நிலையில் இந்தியன் வங்கி சங்கம் (ஐபிஏ) மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் இடையே 12வது ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிவில், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி வங்கி ஊழியர்கள் சம்பளத்தில் 17 சதவீதம் கூடுதலாக பெறுவார்கள்.
இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் 17 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த ஊதிய உயர்வு செயல்பாட்டு வருகிறது. இந்த அறிவிப்பால் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.
வங்கி ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தினால் தனியார் துறையில் 3.8 லட்சம் ஊழியர்களும், பொதுத் துறையில் சுமார் 9 லட்சம் ஊழியர்களும் பயனடைவார்கள். கடந்த ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் 17 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் வேலை தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.