ஹர்திக் பாண்டியாவுக்கு தனி ரூல்ஸ் கிடையாது.. செம ஆப்பு வைத்த பிசிசிஐ.. இதை யாருமே எதிர்பார்க்கல
பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இசான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறாத வீரர்கள் கண்டிப்பாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் பிசிசிஐயின் எச்சரிக்கையும் மீறி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷன் ஆகியோர் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். இது பிசிசிஐ நிர்வாகிகளை கடுப்படைய செய்தது.
இதனால் இருவரும் பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத ஹர்திக் பாண்டியா மட்டும் ஐபிஎல் தொடருக்காக தனி பயிற்சி எடுத்து வந்த நிலையில் அவருக்கு மட்டும் எப்படி இந்த ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஹர்திக் பாண்டியாக்கு மட்டும் ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாமல் ஓய்வில் இருக்கும் போது அவருக்கு எப்படி இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ரூல்ஸ் என்பது அனைவருக்கும் சமமாக தானே இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி இனி பிசிசிஐ உடன் ஊதிய ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களுமே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை அவர் ரஞ்சித் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என்று அவரை சோதித்த என்சிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஹர்திக் பாண்டியா இனி டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் பிசிசிஐ நடத்தும் சையது முஸ்தாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று பிசிசிஐ அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் நேரத்தில் கண்டிப்பாக சையது முஸ்தாக் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவேன் என்று ஹர்திக் பாண்டியா எங்களுக்கு உத்திரவாதம் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தன்னுடைய உத்தரவாதத்தை மீறினால் அவருடைய ஒப்பந்தமும் அதிரடியாக நீக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.