ஹரிஷ் ரவூப் ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான் வாரியம்.. ஜூன் மாதம் வரை முக்கிய தடை

குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பரம எதிரி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்த தோல்விகளுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணிகளை தெறிக்க விடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் ஹரிஷ் ரவூப் நல்ல லைன், லென்த்தை பின்பற்றாமல் ரன்களை வாரி வழங்கி வருகிறார். முன்னதாக உலகக் கோப்பை முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.
முக்கிய தடை:
அதை விட அந்தத் தொடரில் நீங்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று ஹரிஷ் ரவூப்க்கு தேர்வுக் குழு தலைவர் வகாப் ரியாஸ் வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர் அதே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பேஷ் டி20 தொடரில் பணத்துக்காக விளையாடச் சென்றார். மறுபுறம் ஹரிஷ் ரவூப் இல்லாதது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் படுதோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட மறுப்பு தெரிவித்த ஹரிஷ் ஃரவூப்பின் மத்திய சம்பள ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் வாரியம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக காயம் எதுவும் ஏற்படாத நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடாததற்கு ஹாரிஸ் ரவூப் கொடுத்த காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருப்திகரமாக இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வாரியம் கூறியுள்ளது.