Harmanpreet Kaur: யாருகிட்ட! செஞ்சுருவேன் – ஆஸி., பேட்டர் ஹீலியுடன் வாக்குவாதம், அப்புறம் தூள் கிளப்பிய ஹர்மன்ப்ரீத்
ஆஸ்திரேலியா மகளிருக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், ஆஸ்திரேலியா கேப்டன் அலிசா ஹீலி இடையிலான மோதல் நெருப்பு போல் இருந்தது.
ஆட்டத்தின் இடையே இருவரும் அவ்வப்போது வாக்குவதத்தில் ஈடுபட்டும் வந்தனர். ஹர்மன்ப்ரீத் கெளர் வீசிய ஓவரில் ஸ்டிரெய்ட்டாக அவரது கைகளுக்கே பந்தை அடித்து விட்டு கிரீசை விட்டு வெளியேறினார் ஹீலி. அப்போது பந்தை பிடித்தவுடன் உடனடியாக ஸ்டம்பை நோக்கி ஹர்மன்ப்ரீத் த்ரோ செய்ய, பந்து மேலே படாதவாறு ஹீலி பேட்டால் தடுத்தார்.
இதை பீல்டிங் குறுக்கீடு எனக் கூறி ஹர்மன்ப்ரீத் அப்பீல் செய்ய, களநடுவர்களான அனில் செளத்ரி, என் ஜனனி ஆகியோர் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் கடுப்பான ஹர்மன்ப்ரீத் ஹீலியிடம் வார்த்தை போர் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் வீசிய அடுத்த பந்திலேயே ஸ்வீப் ஆட முயன்ற ஹீலி, எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். இந்திய மகளிர் – ஆஸ்திரேலியா மகளிர் போட்டியில் நடைபெற்ற ஹாட் சம்பவமாக அமைந்த இதன் விடியோ வைரலாகி வருகிறது.
Harmanpreet vs Healy fight – pure CINEMA pic.twitter.com/vAxPH5WJt9
— R.K. (@The_kafir_boy_2) December 23, 2023
ஹீரோயினிசத்தை வெளிக்காட்டும் விதமாக, ஹர்மன்ப்ரீத் கெத்து காட்டி எமோஷனை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பரிசளிப்பு நிகழ்வில் களநடுவர்களை வெளிப்படையாக சாடினார்.
இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியா மகளிர் கேப்டன் ஹீலி விக்கெட்டை வீழ்த்தி தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.