தேங்காய் எண்ணெய்யில் 70,000 கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஹர்ஷ்..!

தேங்காய் எண்ணெய் என்ற உடனே பெரும்பாலான இந்திய குடும்பங்களுக்கு நினைவுக்கு வருவது பாராசூட் தேங்காய் எண்ணெய். இந்த பாராசூட் நிறுவனம் எப்படி உருவானது என தெரியுமா?

1970களில் இந்தியாவில் தேங்காய் எண்ணெய்கள் பெரிய பெரிய டின்களில் மட்டுமே விற்பனையாகின. எலி தொல்லையே இதற்கு காரணமாக இருந்தது. எனவே எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் 15 லிட்டர் டின்களில் மட்டுமே தேங்காய் எண்ணெய்களை விற்பனை செய்தன.

குஜராத்: அப்போது குஜராத்தை சேர்ந்த ஹர்ஷ் தன்னுடைய குடும்ப தொழிலான மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இரண்டு தலைமுறைகளாக மசாலா மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் எண்ணெய் தொழிலுக்குள் நுழைய திட்டமிடுகிறார்.

புதிதாக சிந்தித்த ஹர்ஷ்: அப்போது சந்தை நிலவரத்தை ஆய்வு செய்யும் போது , பெரிய பெரிய டின்களில் மட்டுமே தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதை அறிந்தார். எலி தொல்லை காரணமாகவே இந்த நிலை என்பதை உணர்ந்தார்.

பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கி சதுர வடிவ பாட்டில்களில் தேங்காய் எண்ணெய் விற்பனையை தொடங்கினார். ஆனால் அப்போது சந்தையில் சாலிமர் எண்ணெய் 40% லாபம் தந்ததால், விநியோகஸ்தர்கள் இதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

100 கோடி நிறுவனமாக உயர்வு: கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆய்வுக்கு பின் பிளாஸ்டிக்கில் சிலிண்டர் வடிவில் தேங்காய் எண்ணெய் பாட்டிலை வடிவமைத்து அதன் மூலம் சிறிய அளவில் பாராசூட் தேங்காய் எண்ணெய் விற்பனையை தொடங்கினார். இது மக்களிடம் வரவேற்பை பெற்றது. குறுகிய காலத்தில் பாராசூட் நிறுவனம் 48% சந்தையை ஆக்கிரமித்தது. 1990இல் பாராசூட் 100 கோடி நிறுவனமாக உயர்ந்தது.

ஹிந்துஸ்தான் நிறுவனத்தை பந்தாடிய பாராசூட்: 1993இல் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் டாடாவிடம் இருந்து நிஹர் தேங்காய் எண்ணெயை வாங்கியது. அப்போது பாராசூட்டை வீழ்ச்சி அடைய செய்வோம் என வெளிப்படையாக சவால் விடுத்தது ஹிந்துஸ்தான் யுனிலீவர். போட்டியை உணர்ந்து கொண்ட ஹர்ஷ் , பாராசூட்டின் தூய்மை தன்மையை முன்னிலைப்படுத்தி பெரிய அளவில் விளம்பரங்களை மேற்கொண்டார். எனவே பாராசூட் நிறுவனம் 60% சந்தையை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

2000களில் பாராசூட் மற்றும் நிஹர் எண்ணெய் இடையே கடும் போட்டி நிலவியது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் ஹிந்துஸ்தான் யுனி லிபர் தோல்வியை ஒப்புக்கொண்டது. அதாவது 2006ஆம் ஆண்டில் பாராசூட் நிறுவனமே நிஹர் எண்ணெய் நிறுவனத்தையும் வாங்கியது.

10,000 மதிப்புள்ள நிறுவனமாக உயர்வு: இப்போது பாராசூட் குழுமத்தின் மேரிகோ நிறுவனத்தின் மதிப்பு 10,000 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தின் கீழ் 18 பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சபோலா ஆயில், செட் வெட், லிவான் என அனைத்து பொருட்களுமே சந்தையில் பிரபலமானவை. மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு வழங்கப்படும் தயாரிப்புகள் எப்போதுமே வெற்றி அடையும் என்பதற்கும், போட்டிகளை எப்படி எதிர்கொள்வது என்பதற்கும் பாராசூட் நிறுவனம் மிக முக்கிய உதாரணம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *