உங்களுடைய ஆதார் எண் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதா..?

மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணமாக ஆதார் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டு என்பது 12 இலக்க அடையாள எண் ஆகும். இது வங்கி கணக்கை தொடங்குதல், கடன் பெற விண்ணப்பித்தால், சிம் கார்டு வாங்க,குழந்தைகளை பள்ளியில் சேர்க்க என அனைத்திற்கும் பயன்படுகிறது. இந்நிலையில் உங்களுடைய ஆதார் எண் எதற்கெல்லாம் பயன்படுகிறது என அறிந்து கொள்ளலாம். அதற்கான வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளம் வழங்குகிறது. இதனை நீங்கள் UIDAI இணையதளம் அல்லது mAadhaar செயலி மூலம் செய்யலாம்.

ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://resident.uidai.gov.in/aadhaar-auth-history என்பதை கிளிக் செய்து, திரையில் தோன்றும் பாதுகாப்புக் குறியீட்டான ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடியை (VID) உள்ளிட வேண்டும். பின் send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். OTP எண்ணை உள்ளிட்டு ‘submit’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.உறுதிப்படுத்தல் வகை, தேதி வரம்பு, நீங்கள் பார்க்க விரும்பும் பதிவுகளின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு பக்கம் தோன்றும். அதில் ஒரே நேரத்தில் 50 பதிவுகளை நீங்கள் பார்க்கலாம். இதன் மூலம் உங்களுடைய ஆதார் எண் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *