கைகளில் கருமையான நிறம் உள்ளதா? அதை மறையச் செய்வதற்கு இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!
கைகளில் கருமையான நிறம் உள்ளதா? அதை மறையச் செய்வதற்கு இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!
கைகளில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்வதற்கு வீட்டில் உள்ள சில பக்கங்களை வைத்து எவ்வாறு மருந்து தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
கைகளில் உள்ள கருமையை மறையச் செய்ய உதவும் டிப்ஸ்…
* கைகளில் உள்ள கருமையை மறையச் செய்ய முதலில் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து கைகளில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தேய்க்க வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் கழிந்து கழுவி விடலாம். இதை தொடர்ந்து மாலை நேரத்தில் செய்து வந்தால் கைகளில் உள்ள கருமையை மறையச் செய்யலாம்.
* கைகளில் உள்ள கருமையை மறையச் செய்ய தக்காளியை இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை கைகளில் கருமையாக இருக்கும் இடங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழிந்து கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கைகளில் உள்ள கருமையான நிறம் மறைந்து விடும்.
* கைகளில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்ய பாதம் பருப்பை எடுத்து முதல் நாள் இரவில் பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த பாதாமை சிறிது பால் விட்டு அரைத்து பேஸ்டாக தயார் செய்து கொள்ள வேண்டும். இதை கைகளில் கருமையாக இருக்கும் இடங்களில் தொடர்ந்து பூசி வந்தால் கருமையான நிறம் மறைந்து விடும்.
* கைகளில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்ய பப்பாளி பழத்தை எடுத்து அரைத்து பேஸ்டாக தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பப்பாளி பேஸ்டை கைகளில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து கழுவி வந்தால் கருமையான நிறம் மறைந்து விடும்.
* கைகளில் உள்ள கருமை நிறத்தை மறைய செய்ய முதலில் மஞ்சள் தூள் எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு பால் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் தயார் செய்து அதை கைகளில் தேய்த்து ஊற வைத்து கழுவி வந்தால் கருமையான நிறம் மறைந்து விடும்.
* கைகளில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்ய கற்றாழை ஜெல்லை எடுத்து கைகளில் தேய்க்க வேண்டும். பின்னர் அது உலர்ந்த பின்னர் கழுவினால் கைகளில் உள்ள கடுமையான நிறத்தை மறையச் செய்யலாம். இதை தொடர்ந்து செய்து வந்தாலே போதும்.