“நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்..!” – ராஜஸ்தான் அமைச்சர் சொன்ன காரணம்
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
அதைத்தொடர்ந்து, முதல்வர் தேர்வு விவகாரத்தில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உட்பட பலரின் பெயர் முன்னிலையில் இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பஜன்லால் சர்மா என்பவரை பா.ஜ.க முதல்வராக நியமித்தது. இத்தனைக்கும், பஜன்லால் சர்மா இப்போதுதான் முதல்முறை எம்.எல்.ஏ. பின்னர், 22 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ராஜஸ்தான் முதல்வர் – பிற அமைச்சர்கள்
அவர்களில், 12 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த 12 கேபினட் அமைச்சர்களில், பாபுலால் காரடி என்பவரும் ஒருவர். இந்த நிலையில், நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்று பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை அமைச்சராகியிருக்கும் இந்த பாபுலால் காரடி, நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், மோடி உங்களுக்கு வீடு கட்டித்தருவார் என்று பொதுக்கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
செவ்வாய்க்கிழமை உதய்பூரின் உதய்பூரில் நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா முகாம் பொதுக்கூட்ட மேடையில் இதனைப் பேசிய அமைச்சர் பாபுலால் காரடி, “யாரும் தலைக்கு மேல் கூரை இல்லாமல், பட்டினியுடன் தூங்கக்கூடாது என்பது பிரதமரின் கனவு.