விராட் கோலி- அனுஷ்காவின் மகனை பார்த்ததுண்டா? வைரலாகும் AI புகைப்படம்

இந்தியாவின் பிரபல ஜோடியான விராட் கோலி- அனுஷ்கா சர்மாவுக்கு 2வதாக மகன் பிறந்துள்ள நிலையில், குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரரான விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது, இதுவரையிலும் தனது குழந்தையின் முகத்தை கூட காட்டாமல் வளர்த்து வருகின்றனர்.
தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையொன்று பிறந்ததை சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர்.
குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளதாகவும், மிக மகிழ்ச்சியுடன் வாமிகாவின் சகோதரரை வரவேற்பதாகவும் அறிவித்தனர்.
அகாய் என்பதற்கு ”உடலை விட மேலானவர்” , ”பிரகாசிக்கும் நிலவு” என்பது அர்த்தமாம்.
இந்நிலையில் கோலியின் மகன் என AI புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Al-generated imaginary picture of Akaay Kohli. pic.twitter.com/nQg4y9lwBG
— Shubham2.0 (@bhav_paaji) February 22, 2024