HBD Kaushalya : 90-ஸ்களுக்கு பிடித்த கதாநாயகி.. திருமணம் வரை சென்ற உறவு.. நடிகை கௌசல்யா பிறந்தநாள் இன்று!
1979 ஆம் ஆண்டு டிசம்பர் 30 தேதி பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை கௌசல்யா.90ஸ் களுக்கு பிடித்த கதாநாயகிகளுள் ஒருவர் கௌசல்யா. மாடல் துறையில் இருந்து நடிப்பு துறைக்கு வந்தவர். இவர், தென்னிந்திய படங்களிலேயே அதிகமாக நடித்துள்ளார். முன்னர் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது துணை நடிகை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் வெளியான ஏப்ரல் 19 படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானார். இவர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் பலரும் கௌசல்யா என்று அழைத்து வருகிறார்கள். முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இவர் விஜய் உடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்
இந்த படத்தையடுத்து நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, வானத்தை போல என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். இன்றளவும் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் நடித்த பெரும்பான்மையான படங்களில் புடவை கட்டிக்கொண்டு குடும்பபாங்கான தோற்றத்தில் நடத்திருப்பார். இவர் சில அம்மன் படங்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். காதல் வாழ்க படத்தில் வரும் ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் பாடலை இன்று பலர் ப்ளே லிஸ்டில் வைத்துள்ளனர். பூவேலி திரைபடத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். முன்னணி பாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
பல வெற்றிப்படங்களை கொடுத்த கௌசல்யா சந்தோஷ் சுப்பிரமணியன் படத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் கௌசல்யா கடந்த சில ஆண்டுகளாக துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நட்பே துணை, 4 லெட்டர்ஸ், ராங் டீ, உத்ரா, ஹீரோ, ராதா கிருஷ்ணா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனக்கு தற்போது வரை திருமணம் ஆகாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்
அதில், “தனக்கும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு தொடர்பு இருக்கிறது என அப்போது கிசு கிசு எழுந்ததது. ஆனால், இது உண்மையல்ல. திருமணம் என்பது மிகவும் அழகான விஷயம். தனக்கு ஒருவருடன் திருமணம் வரை ஒரு உறவு சென்றது. ஆனால், அந்த உறவு முறிந்து போனதால் மனதளவில் அதிலிருந்து வெளிவர தனக்கு நேரம் எடுத்துக்கொண்டது. அது மட்டுமன்றி உடலில் சில
ஆரோக்கிய குறைபாடுகள் இருந்ததால் சில ஆண்டுகள் உடல் பருமனுடன் காணப்பட்டேன்” என தெரிவித்துள்ளார். இன்று இவரின் பிறந்தநாள். இன்றைய தினம் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.