HBD Sivakarthikeyan: படக்குழுவினருடன் கேக் வெட்டி விருந்து வைத்து பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

டிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை SK23 படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து படக்குழுவினருக்கு தனது கைகளால் உணவு பரிமாறினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹீரோவாக பாண்டிராஜ் அவர்கள் இயக்கி 2012 ல் வெளியான மெரினா படத்தில் செந்தில் நாதனாக மாறிப்போனார். அதே ஆண்டு வெளியான இயக்குநர் எழிலின் மனங்கொத்தி பறவையில் நமது மனதை அள்ளி கொண்டார். 2013 ல் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விமலுடன் இணைந்து கேடிபில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் அவர் ஏற்று நடித்த பட்டைமுருகன் கதாபாத்திரம் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இவரது படங்களுக்கு சிறுவர்கள் அதிக அளவில் ரசிகர்களாக உள்ளனர்.

தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக மாறியுள்ளார். ஆரம்ப காலத்தில் எதிர்நீச்சல், ரஜினி முருகன் போன்ற கமர்ஷியல் ஹிட்களை கொடுத்து ரசிகர்களை வென்றார். சிறந்த நடிகராக மட்டுமின்றி, சூப்பர் சிங்கராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். இவருக்கு தெலுங்கிலும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பிரின்ஸ் படத்தின் மூலம் டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

சமீபத்தில் மாவீரன் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்.

முன்னதாக எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது திறமையால் நடிகராக திரையுலகில் நுழைந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். நடிப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ஆணி வேராக தொடங்கிய பயணம் தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *