மாஸ் காட்டும் HCL ரோஷினி நாடார்.. ஹெச்சிஎல் ஊழியர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி..!!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஹெச்சிஎல், ரோஷினி நாடார் கைக்கு வந்த பின்பு வேகமாகவும், வலிமையுடனும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு அதன் ஊழியர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் ரோஷினி நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 4350 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 6.2 சதவீதமும், செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 13.5 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. இதேபோல் டிசம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் வருவாய் 28,446 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டைக் காட்டிலும் 6.65 சதவீதமும், செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் 6.5 சதவீத அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது.ஹெச்சிஎல் டெக் வரும் காலத்தில் அதிகப்படியான முதலீட்டைச் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவையில் செய்யவும் முடிவு செய்துள்ளது. இந்த மோசமான காலகட்டத்திலும் ஹெச்சிஎல் நிறுவனம் தொடர் வளர்ச்சி பாதையில் உள்ளதாக இந்நிறுவனத்தின் சிஇஓ, நிர்வாக இயக்குனர் சி.விஜயகுமார் தெரிவித்தார்.டிசம்பர் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் சுமார் 18 முக்கியத் திட்டங்களைப் பெற்றுள்ளதாகவும், இதில் 6 திட்டங்கள் சாப்ட்வேர் பிரிவிலும், 12 சேவைகள் சேவை பிரிவிலும் பெறப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் திட்டங்கள் ரீடைல், லைப் சையின்ஸ், ஹெல்த்கேர், பப்ளிக் சேவைகள், நிதி சேவை பிரிவில் பெற்றுள்ளது.ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 14.2 சதவீதத்தில் இருந்து 12.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 21.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.சந்தை மதிப்பீட்டின் படி இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த காலாண்டைப் போலவே இந்தக் காலாண்டும் ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது.செப்டம்பர் காலாண்டில் 3630 பிரஷ்ஷர் ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 3818 பிரஷ்ஷர் ஊழியர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,617 பேர் அதிகரித்து 2,24,756 ஆக உயர்ந்துள்ளது.கடைசியாக முதலீட்டாளர்களுக்கு 2 ரூபாய் முகமதிப்புடைய பங்குகளுக்கு 12 ரூபாய் ஈவுத்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளது ஹெச்சிஎல் டெக் நிர்வாகம். 2024 ஆம் ஆண்டில் நிலையான நாணய மதிப்பீட்டில் ஹெச்சிஎல் டெக் வருவாய் 5.0 முதல் 5.5 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளது. இன்போசிஸ் 2.5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.