செமிகண்டக்டர் துறையில் இறங்கும் HCL ரோஷ்னி நாடார்.. Foxconn உடன் மெகா கூட்டணி.. வேற லெவல் திட்டம்..!
இந்தியாவின் முக்கிய டார்கெட்டாக மாறியிருக்கும் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் குரூப் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்த மாபெரும் வெற்றி கூட்டணி இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் OSAT தொழிற்சாலையை அமைக்க உள்ளது, OSAT என்பது செமிகண்டக்டர் சிப்-ஐ அசம்பிளி மற்றும் டெஸ்டிங் சேவைகளை அளிக்கும் நிறுவனமாகும்.
ஹெச்சிஎல் நிறுவனம் மற்றும் தைவான் பாக்ஸ்கான் கூட்டணியில், 40 சதவீத பங்குகளைப் பாக்ஸ்கான் நிறுவனமும், 60 சதவீத பங்குகளை ஹெச்சிஎல் கொண்டு சுமார் 37.2 மில்லியன் டாலர் அதாவது 310 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த OSAT தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
OSAT துறையில் இறங்குவதை இரு நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர்களும் உறுதி செய்த நிலையில் ஹெச்சிஎல் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம் இந்தியாவில் கம்பியூட்டர் ஹார்ட்வேர் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது தான், ஆனால் வர்த்தகம் வாய்ப்புகள் காரணமாக மென்பொருள் சேவைத்துறைக்கு ஹெச்சிஎல் மாறியது.ரேஷினி நாடார் தலைமையில் ஹெச்சிஎல் மீண்டும் தனது வன்பொருள் தயாரிப்பு அனுபவத்தையும், நெட்வொர்க்-ஐ தூசு தட்ட உள்ளது, மேலும் பாக்ஸ்கான் போன்ற முன்னணி உற்பத்தி நிறுவனத்தின் கூட்டணி செமிகண்டக்டர் போன்ற துறையில் ஹெச்சிஎல்-க்கு பெரும் பலமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் தைவான் பங்குச்சந்தையில் ஹெச்சிஎல் உடனான கூட்டணி குறித்த அறிவிப்பை பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப்-ன் கிளை நிறுவனமான Foxconn Hon Hai Technology India Mega Development Pvt. Ltd தெரிவித்தது.ஒரு மென்பொருள் நிறுவனமாக ஹெச்சிஎல் நிறுவனத்திற்குச் செமிகண்டக்டர் டிசைன் மற்றும் டெஸ்டிங் சாப்ர்வேர் பிரிவில் நீண்ட கால அனுபவம் உள்ளது, இத்துறையில் பல சிப் தயாரிப்பாளர்களுடன் கூட்டணியும் உள்ளது.
இந்த நிலையில் செமிகண்டக்டர் அசம்பிளிக்கும், உற்பத்திக்கும் பாக்ஸ்கான் போன்ற கூட்டணி இரு தரப்பு நிறுவனங்களுக்கும் பெரும் வாய்ப்பாக அமைய உள்ளது.மாஸ் காட்டும் HCL ரோஷினி நாடார்.. ஹெச்சிஎல் ஊழியர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி..!! செமிகண்டக்டர் துறையில் பாக்ஸ்கான் இதற்கு முன்பு அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமத்துடன் 20 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்துடன் கூட்டணியை அமைத்தது. ஆனால் பல்வேறு காரணத்தால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டு, கூட்டணி முறித்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.