புதிய படத்திற்காக தனது பெயரை மாற்றிய பிரபாஸ்? என்ன பெயர் தெரியுமா?

மேலும் படத்திற்கு ராஜா சாப் என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் போஸ்டரில் பிரபாஸ் லுங்கி மற்றும் சட்டை அணிந்தபடி ஜாலியாக பாகுபலிக்கு முந்தைய பிரபாஸை நினைவுபடுத்துகிறார். முதலில் ராஜா டீலக்ஸ் என்று அழைக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது ராஜா சாப் என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வெளியாகி உள்ளது.

மாருதி இயக்க உள்ள இந்த படத்தை, பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் மற்றும் படத்திற்கு எஸ் தமன் இசையமைக்க உள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக டிசம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியான சலார் பார்ட் 1 போர்நிறுத்தம் படத்தில் நடித்து இருந்தார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். கேஜிஎப் படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் நடந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தனர்.

இதைத் தொடர்ந்து பிரபாஸ் தற்போது ‘கல்கி கி.பி. 2898’ படத்தில் நடித்து வருகிறார். புராண அறிவியல் புனைகதையை மையமாக உருவாகும் இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படம் மே 9, 2024 அன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த படங்களை தவிர சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் சலார் பார்ட் 2 ஆகிய படங்கள் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *