“அவர் பயிற்சியை பின்னால் இருந்து பார்த்து கற்றுக் கொள்கிறேன்.. அதிரடியாதான் விளையாடுவேன்” – ரஜத் பட்டிதார் பேச்சு
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த விராட் கோலி, தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் அவருடைய இடத்தில் உள்நாட்டில் மத்திய பிரதேஷ் அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடும் ரஜத் பட்டிதார் சேர்க்கப்பட்டார்.
ஆனாலும் பிளேயிங் லெவனில் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடம் கேஎல் ராகுலுக்கு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரஜத் பட்டிதார் விளையாடவில்லை.
தற்சமயம் கேஎல்.ராகுல் காயத்தின் காரணமாக தொடரை விட்டு வெளியேறி இருப்பதால், ரஜத் பட்டிதார் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவது ஏறக்குறைய உறுதியான ஒன்றாகவே தெரிகிறது.
இந்த நிலையில் அவர் தன்னுடைய பேட்டிங் தயாரிப்புகள் மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வந்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் எவ்வாறெல்லாம் விஷயங்களை கவனிக்கிறார் என்பது குறித்து விரிவாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரஜத் பட்டிதார் பேசும் பொழுது ” நான் எப்பொழுதும் விராட் கோலி வலைகளில் பயிற்சி செய்யும் பொழுது பின்னால் இருந்து அவர் பேட்டிங் செய்வதை கவனிப்பேன். அவருடைய கால் மற்றும் உடல் நகர்வுகள் ஆச்சரியப்படுத்த தக்கதாக இருக்கும். நான் அவரது பேட்டிங்கை பார்த்து ரசிக்கிறேன். அவரிடமிருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்களை என்னுடைய பேட்டிங்கில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். இது எளிதான ஒன்று கிடையாது ஆனாலும் நான் விடாமுயற்சியுடன் செய்கிறேன்.