அவர் ரெடியா இருக்காரு.. முதல் போட்டியே கடைசி வாய்ப்பா இருக்கலாம்.. சர்பராஸ் கானுக்கு ஹர்பஜன் அறிவுரை
விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி துவங்குகிறது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பேட்டிங்கில சொதப்பிய இந்தியா சொந்த மண்ணில் பரிதாபமான தோல்வியை சந்தித்தது. அந்த நிலைமையில் நடைபெறும் 2வது போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி வாய்ப்பா இருக்கலாம்:
அதற்கு முன்பாகவே விராட் கோலியும் முதலிரண்டு போட்டிகளில் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளது இந்தியாவுக்கு முதல் போட்டியில் பின்னடைவை கொடுத்தது. இருப்பினும் இந்த 3 வீரர்கள் இல்லாததால் 2வது போட்டியில் ரஜத் படிதார் அல்லது சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் ஒருவருக்கு அறிமுகமாக களமிறங்குவதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் குவித்து கடுமையாக போராடி தேர்வாகியுள்ள சர்பராஸ் கான் 2வது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் விராட் கோலி வரும் போது 3வது போட்டியில் சர்பராஸ் கான் நீக்கப்படுவார் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். எனவே முதல் போட்டியிலேயே முடிந்தளவுக்கு அபாரமாக செயல்பட்டு சர்பராஸ் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருவேளை அதை செய்ய தவறினால் மேற்கொண்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கான் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை அதிகமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் விராட் கோலி மீண்டும் வரும் போது அவர் அணியிலிருந்து வெளியேற வேண்டும்”