CSK கேப்டன் இவர் தான்.. ஆனா முடிவு நான் தான் எடுப்பேன்.. ருதுராஜ்க்கு சுதந்திரம் கொடுப்பாரா தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது. சிஎஸ்கே இன்று ஒரு பாரம்பரியத்தை தோனி கஷ்டப்பட்டு உருவாக்கினார். தமக்கு பிறகு இந்த ராஜ்யத்தை யார் பார்த்துக் கொள்ளப் போகிறார் என்பதையும் தோனி இன்று அறிவித்திருக்கிறார்.

27 வயதான ருதுராஜ், அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் களமிறங்கினாலும், முடிவு தோனி தான் எடுப்பார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

எப்படி படையப்பா படத்தில் மாப்பிள்ளை இவர்தான், ஆனா அவர் போட்டு இருக்கிற டிரஸ் என்னது என்று செந்தில் ரஜினி காமெடி வருமோ, அதே போல் கேப்டன் ஆக ருதுராஜ் இருந்தாலும் தோனி தான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படித்தான் 2017 ஆம் ஆண்டு இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி விராட் கோலிக்கு அந்தப் பதவியை கொடுத்தார்.

ஆனால் முக்கிய கட்டத்தில் விராட் கோலி ஓரமாக நின்று விடுவார். தோனி தான் அனைத்து முடிவுகளுமே எடுப்பார். 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா வந்த நிலையில் தோனி சில போட்டிகளில் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இதனை அடுத்து ஜடேஜாவை பொம்மை கேப்டன் ஆக மாற்றிய தோனி முக்கிய முடிவுகளை அவர் எடுக்கத் தொடங்கினார்.

தமக்கு கேப்டனாக சுதந்திரம் வழங்கப்படவில்லை என்பதை மறைமுகமாக கூறி ஜடேஜாவும் தனக்கு காயம் ஏற்பட்டு விட்டது என அந்த தொடரில் இருந்து விலகினார். அந்தத் தொடரின் போது ஜடேஜாவுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் நான் ஊட்டி விட முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் புதிய சீசனில் முதல் ஆட்டத்தில் தோனி முழு பொறுப்பையும் ருதுராஜ்க்கு கொடுத்துவிட்டு ஒதுங்கி விடுவாரா இல்லை தோனியே அனைத்து முடிவுகளையும் எடுத்து மீண்டும் ருதுராஜை பொம்மை கேப்டனாக மாற்றுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இருந்துள்ளது.

எனினும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியை தயார் செய்ய வேண்டுமென்றால் தோனி முதல் சில போட்டிகளில் ருதுராஜ்க்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டு அதன் பிறகு அவருக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *