சிவகார்த்திகேயனை கட்டுமஸ்தான மிலிட்ரி மேனாக மாற்றியவர் இவர்தான்!

கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். எஸ்.கே.21 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் வெளியிடுகின்றனர்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், அவரது பாடி ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோவை ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டது. இதில் ஜிம்மில் கடும் பயிற்சி எடுத்து, ஒரு ராணுவ வீரனுக்குரிய கட்டுமஸ்தான உடற்கட்டுடன் சிவகார்த்திகேயன் உருமாறியிருப்பதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிவகார்த்திகேயனின் இந்தப் புதிய தோற்றம், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு அவரது பாடி ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு உறுதுணையாக இருந்தவர், சென்னை அடையாறைச் சேர்ந்த பிட்னெஸ் ட்ரெய்னர் சந்தீப். திரைபிரபலங்கள் பலருக்கு இவர் ட்ரெய்னராக இருந்துள்ளார். முக்கியமாக சிம்புவின் தொப்பையை குறைத்து, அவரை பிட்டாக மாற்றியவர் சந்தீப். அதனை கேள்விப்பட்டு, சிவகார்த்திகேயனுக்கு சந்தீப்பை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பரிந்துரைத்துள்ளார்.
எஸ்.கே. 21 படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரனாக நடிக்கிறார். அதற்கேற்ப அவருக்கு பிட்னெஸ் ட்ரெய்னிங் அளித்துள்ளார் சந்தீப். பாடிபில்டர்ஸை போல் இல்லாமல் ராணுவ வீரர்கள் பிட்டாக இருப்பார்கள். பாடிபில்டர்ஸைப் போல அதிகளவு மசில்கள் அவர்களுக்கு இருக்காது. அதற்கேற்ப சந்தீப் சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த பாடி ட்ரான்ஸ்பர்மேஷனும், ராஜ் கமலின் படமும் அவரது சினிமா கரியரில் முக்கிய திருப்புமுனையாக அமையும்.