Yes சொல்லிவிட்டார்! 60 வயதில் காதலியை கரம்பிடிக்கும் அவுஸ்திரேலிய பிரதமர்

அவுஸ்திரேலிய பிரதமர் தனது காதலியை கரம்பிடிக்கவுள்ளதாக, சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

Anthony Albanese பதிவு
அவுஸ்திரேலியாவில் பிரதமராக இருப்பவர் அந்தோணி அல்பானீசு (Anthony Albanese). இவர், தனது காதலியான ஜோடீ ஹெய்டன் (Jodie Haydon) என்பவரை திருமணம் செய்யும் முடிவை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2020- ம் ஆண்டு தொடக்கத்தில் மெல்போர்ன் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் தான் முதன்முறையாக Jodie Haydon -யை Anthony Albanese சந்தித்தார்.

இதன்பின், 2022 -ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது Jodie Haydon மற்றும் Anthony Albanese இருவரும் ஒன்றாக இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

இதனையடுத்து, Anthony Albanese பிரதமரான பின்னரும் துபாய், மேட்ரிட், பாரீஸ், லண்டன் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கு செல்கையில், அவருடன் Jodie Haydon சென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த விருந்து நிகழ்ச்சிக்கும் இருவரும் ஒன்றாக சென்று கலந்து கொண்டனர்.

இதனிடையே, பதவியில் இருக்கும் போது திருமண நிச்சயம் நடந்த முதல் பிரதமர் Anthony Albanese என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், Anthony Albanese தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அவள் ஆம் என்று சொல்லிவிட்டார்” என்று கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அல்பானீசுக்கு முதல் திருமணத்தின் வழியே நாதன் அல்பானீசு என்ற மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *