அரசு ஊழியராக இருந்தவர்.. இன்று ரூ.6,17,000 கோடிக்கு அதிபதி.. இன்போசிஸ் மகிமை.
காலணா காசாக இருந்தாலும் கவர்மெண்ட் காசாக சம்பாதிப்பது தான் கௌரவம் என்று நம்மில் பலரும் நினைக்கும் ஒரு விஷயமாகும்.
ஆனால் இந்த பாரம்பரியமான பாதையில் இருந்து விலகி சொந்தக் காலில் நின்று ஜெயிப்பதுதான் சாதனை என்பவர்களும் உள்ளனர்.அப்படி மாற்றி யோசித்து தனது அரசு வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சொந்தமாக உழைத்து இன்றைக்கு ரூ.6,17,000 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் இணை நிறுவனராக இருப்பவர் கே.தினேஷ். பெங்களூரில் அரசுக்கு சொந்தமான ஒரு எலக்ட்ரிக் பேக்டரியில் வேலை பார்த்து வந்தார் தினேஷ். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு 1981 ஆம் ஆண்டில் கேஆர் நாராயணமூர்த்தி மற்றும் சிலருடன் சேர்ந்து சொந்தத் தொழிலைத் தொடங்கினார்.பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை கணித பட்டப்படிப்பு முடித்தவர் தினேஷ். 2006 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் டாக்டரேட் பட்டம் முடித்தார்.இன்போசிஸ் நிறுவனத்தின் 7 இணை இயக்குநர்களில் 69 வயதான தினேஷ் முக்கியப் பங்கை ஆற்றினார். 30 ஆண்டுகளாக அதன் நிர்வாக போர்டில் உறுப்பினராகப் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டில் போர்டில் இருந்து விலகி புதிய அத்தியாயத்துக்கு வழி வகுத்தார்.தினேஷும் அவரது மனைவி ஆஷாவும் சேர்ந்து ஆஷ்ரயா ஹாஸ்தா டிரஸ்ட் எனும் அறக்கட்டளயைத் தொடங்கினர். கல்வி, மருத்துவ உதவி, கால்நடை நலம், விவசாயத்துறைகளில் பல்வேறு அறப்பணிகளை இந்த டிரஸ்ட் செய்து வருகிறது. போர்ப்ஸ் கணிப்பின்படி தினேஷின் நிகர சொத்து மதிப்பு 2024 ஜனவரி 3 ஆம் தேதிப்படி ரூ.19,800 கோடி ஆகும்.இன்போசிஸ் நிறுவனத்தில் அவரது பங்கு பங்குதாரர் என்று மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் உள்ள இன்போசிஸ் டெக்னாலஜிஸ் தலைவராக பதவி வகித்தார். அங்கு குவாலிட்டி, இன்பர்மேஷன் சிஸ்டம், கம்யூனிகேஷன் டிசைன் குரூப் உள்பட பல்வேறு துறைகளை நிர்வகித்து வந்தார்.ஓய்வு நேரத்தில் அறப்பணிகளில் தனது மனைவியுடன் சேர்ந்து கழித்து வந்தார். தினேஷுக்கு திவ்யா, தீக்ஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். வேதாஎர்த் என்ற மூலிகை சார்ந்த உடல்நலத் தயாரிப்புகள் நிறுவனத்தை திவ்யா நடத்தி வருகிறார்.தீக்ஷா ஒரு கார்ப்பொரேட் கவுன்சலிங் கம்பெனியை நடத்தி வருகிறார்.திவ்யாவும், தீக்ஷாவும் இந்த நிறுவனங்களை மிகவும் திறம்பட நடத்தி வருகின்றனர். இரண்டுமே நல்ல லாபத்தில் இயங்குகின்றன.திவ்யா, தீக்ஷா ஆகிய இருவருக்கும் அவரது தந்தை தினேஷ் தனது அரசு வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சொந்தத் தொழிலைச் செய்து முன்னேற வேண்டும் என்ற வாழ்க்கையைத் தொடங்கியது ஒரு முன்னோடியாக விளங்குகிறது.