பல கோடி கிடைத்திருக்கும்.. தோனி வேண்டாம்னு சொல்லிட்டாரு.. தங்கமான மனசுங்க – பேட் நிறுவனர் நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி பல சாதனைகளை படைத்து வருகிறார். கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தோனி சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தற்போது இந்த நிலையை அடைந்திருக்கிறார்.
தோனியின் இந்த வளர்ச்சிக்கு அவர்களுடைய நண்பர்களும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறார்கள். தனது நண்பனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி தன்னுடைய பேட்டில் தனது நண்பனின் கடை ஸ்டிக்கரை ஒட்டி விளையாடிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இது ரசிகர்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மற்றொரு சம்பவமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தோனி தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய போது பேட் வாங்குவதற்கு பி ஏ எஸ் என்ற நிறுவனம் உதவி செய்திருக்கிறது. பிஎஸ் என்ற நிறுவனம் தோனிக்கு பேட் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்காக தோனி விளையாடிய காலகட்டத்தில் அவருக்கு பல நிறுவனங்கள் ஒப்பந்தம் போட முன் வந்திருக்கிறது. ஆனால் அதை எல்லாம் வேண்டாம் என சொல்லி தோனி பி ஏ எஸ் நிறுவனத்தின் ஸ்டிக்கரை தான் பயன்படுத்தி தனது நன்றி கடனை செலுத்தினார். இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த போது தோனி பி ஏ எஸ் ஸ்டிக்கர் வேண்டும் என அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சோமி கோலியிடம் பேசி இருக்கிறார்.
கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும்போது தோனி ஏன் இப்படி செய்கிறார் என அவர் ஆச்சரியப்பட்டாராம். ஸ்டிக்கர்களை தோனிக்கு அவர் அனுப்பிய போது உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று சொல்லுங்கள் நான் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அதற்கு தோனி அது எல்லாம் வேண்டாம் நீங்கள் ஸ்டிக்கரை மட்டும் அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
தோனிக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் பேட் ஸ்பான்சர் செய்யவே பல நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் ஆரம்ப காலத்தில் தனக்கு உதவி செய்த ஸ்பான்சருக்கு நன்றி கடனாக இதை செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட சோமி கோலி, தோனியின் மனைவி மற்றும் தாய் தந்தையிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு அவர்களும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். ஆனால் தோனி இதற்கு பணம் வாங்கக்கூடாது எனக் கூறி உலக கோப்பையில் அந்த பேட்டை பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் தோனிக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்காமல் போயிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள சோமி கோலி நன்றி கடனுக்காகவே தோனி இதனை செய்ததாக கூறியுள்ளார்.