Health Alert! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் வேண்டாமே..!!
மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்தில் இது முக்கியமான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது.
அதிலும், குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் உடலுக்கு சூட்டை கொடுத்து குளிர் கால நோய்கள் வராமல் காக்கிறது. தினமும் மஞ்சள் பாலை குடிப்பதால் சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் நீங்கும். மஞ்சள் பால் குடிப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் காணப்படுகின்றன. இது எந்த தொற்றுநோயையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆனால் மஞ்சள் பால் அனைவருக்கும் நல்லது என கூற முடியாது. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், இதை குடிப்பதால் நன்மைக்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும். எந்தெந்த நபர்கள் மஞ்சள் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம். மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இதன் காரணமாக செரிமான அமைப்பு பலவீனமடையலாம். சில சமயங்களில் வயிற்றில் வீக்கமும் ஏற்படும். அமில பிரச்சனையும் ஏற்படலாம்.
இரும்புச்சத்து குறைபாடு
அதிக மஞ்சளைப் பயன்படுத்துவதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ஆனால் மஞ்சளை அதிகமாக உட்கொள்பவர்களின் உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் குறைகிறது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்காமல் போகலாம். எனவே, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மஞ்சள் பாலை உட்கொள்வதை தவிர்க்கவும்.