குழந்தைகளுக்கும் வரும் மாரடைப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்!
பொதுவாக குளிர்கால மாதங்களில் மாரடைப்பு வரும் ஆபத்து அதிகரிக்கிறது. இந்த குளிர்ந்த காலநிலை வயதானவர்கள் மற்றும் கொமொர்பிடிட்டிகள் உள்ளவர்களை அதிகம் பாதிப்படைய செய்கிறது. சமீபத்தில் 5 வயது கொண்ட இளம்பெண் மாரடைப்பால் இறந்துள்ளார். இது அதிர்ச்சியாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு மாரடைப்பு மற்றும் இருதய பிரச்சனை அதிகமாகி உள்ளது. அதிகம் ஓடி விளையாடாமல் உட்கார்ந்த இடத்திலேயே இருப்பது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மொபைல் போனில் கார்ட்டூன்களை பார்த்துக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மாரடைப்பால் இறந்துள்ளார்.
வீட்டில் படுத்துக்கொண்டு மொபைல் போன் பார்த்துக்கொண்டிருந்த போது நிலைதடுமாறி விழுந்து இறந்துள்ளார். அந்த சிறுமி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் இறந்துள்ளார். மாரடைப்பால் சிறுமி இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். மருத்துவர்கள் கூறுகையில், “உடலை பிரேத பரிசோதனைக்காக கொடுக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம், ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்” என்று கூறினார். இதே போல கடந்த சில ஆண்டுகளாக சிறு வயது குழந்தைகள் பலர் திடீர் என இறக்கின்றனர்.
குழந்தைகளுக்கு மாரடைப்பு அறிகுறிகள்
திடீர் சுயநினைவு இழப்பு, சோர்வு, மார்பில் அசௌகரியம், ஒழுங்கற்ற சுவாசம் மற்றும் படபடப்பு ஆகியவை மாரடைப்பு வருவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஆகும். குழந்தைகளில் ஏற்படும் மாரடைப்பை தடுக்க உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பது அவசியம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பது மிகவும் முக்கியமானது. புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை கொண்ட சரியான உணவுகளை கொடுக்க வேண்டும். இவற்றின் பற்றாக்குறையின் அபாயத்தை அதிகரிக்கிறது.
குழந்தைகளின் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். இது உடலில் தீங்கு விளைவிக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் கண் ஆரோக்கியத்தையும் பராமரிக்க மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது சமமாக முக்கியமானது.