அடாவடியாய் எகிறும் எடையை அசால்டாய் குறைக்கும் அயுர்வேத டிப்ஸ்: சில நாட்களின் எடை குறையும்

எடையை குறைப்பது மக்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. எடை அதிகரிப்பது ஆளுமையை பாதிப்பது மட்டுமின்றி, இது நீண்ட நாட்களுக்கு நீடித்தால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவுகளுடன் சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்யலாம். பலர் எடையை குறைக்க (Weight Loss) ஜிம் செல்கிறார்கள், உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் இதில் தேவையான பலன் கிடைப்பதில்லை. மேலும் இவற்றுக்கான நேரமும் அனைவரிடமும் இருப்பதில்லை. சில எளிய பழைய ஆயுர்வேத முறைகள் எடையைக் குறைக்க அல்லது பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடையை வேகமாக குறைக்க பயனுள்ளதாக இருக்கும் 7 ஆயுர்வேத முறைகள் பற்றி இங்கே காணலாம்.

1) வெதுவெதுப்பான நீர்

ஆயுர்வேதத்தில் எப்போதும் குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை (Warm Water) குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில், வெதுவெதுப்பான நீர் அமிர்தமாகக் கருதப்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை (அமா) அகற்றும். அமா என்பது ஒரு வகை ஒட்டும் உணவு. இது மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் சேரும். தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது இதை அகற்ற உதவும். நீங்கள் விரும்பினால், இஞ்சி போன்ற மூலிகைகளையும் நீரில் சேர்க்கலாம். இது தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்க பெரிதும் உதவும்.

2) நல்ல உறக்கம்

ஆயுர்வேதத்தின் (Ayurveda) படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்கு உகந்த நேரம் என்று கருதப்படுகின்றது. போதுமான தூக்கமின்மை மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதிய தூக்கமின்மையும் எடை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

3) இரவு உணவு

இரவில் லேசான உணவை (Dinner) உட்கொள்ளவும். தினமும் இரவு லேசான இரவு உணவை உட்கொள்வது செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தாது. நீங்கள் தூங்கும்போது உடலின் இயற்கையான நச்சு நீக்கும் செயல்முறைகளை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி இரவு 7 மணிக்குள் இரவு உணவு உண்பதற்கு சிறந்த நேரமாக கருதப்படுகின்றது. இதனால் உடலுக்கு உணவு செரிக்க போதுமான நேரம் கிடைக்கும்.

4) ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுங்கள்

செரிமான செயல்முறையை இயல்பாக வைத்திருக்க உடலுக்கு சிறிது ஓய்வு தேவை. எனவே, ஆரோக்கியமான மற்றும் சிறிய அளவிலான உணவை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். எனவே, ஒரு நாளைக்கு மூன்று முறை நாளின் முக்கிய உணவுகளை உட்கொள்வது உடலுக்கு ஜீரணிக்க நேரத்தை வழங்குகிறது.

5) இரவு உணவுக்குப் பிறகு நடப்பது நல்லது

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, தினமும் ஜிம்மிற்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், சாப்பிட்ட பிறகு தினமும் குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும்.

6) உணவில் ஆறு சுவைகளைச் சேர்க்கவும்

ஆயுர்வேதம் உணவை சுவைக்கு ஏற்ப இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம் என 6 வகைகளாகப் பிரிக்கிறது. உணவில் இந்த சுவைகள் அனைத்தும் இருப்பது மிகவும் முக்கியம். இருப்பினும், அதிக சர்க்கரை மற்றும் அதிக உப்பு உட்கொள்வதை தவிர்க்கவும். இதனால் எடை அதிகரிக்கலாம்.

7) மூலிகைகளை உட்கொள்ளுங்கள்

பொதுவாக பயன்படுத்தப்படும் சில வீட்டு மசாலாப் பொருட்கள் மற்றும் மஞ்சள், இஞ்சி, அஸ்வகந்தா, திரிபலா மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மூலிகைகள் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். தினசரி உணவில் இந்த மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது எடையைக் குறைக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *