“ஹலோ தம்பி போலீஸ் பேசுறோம்பா.. ஆபாச படம் பாக்குறீயாமே!” கோவையில் அத்துமீறிய மாணவர்கள்.. அதிரடி கைது

கோயம்புத்தூர்: கோவையில் ஆபாச படம் பார்ப்பதாக கூறி மாணவர்களிடையே வசூல் வேட்டை நடத்திய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

ஆபாச படம் பார்ப்பது தொடர்பான பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் இளைஞர்களிடையே எழுந்திருக்கிறது. எப்படி இருப்பினும் இந்த படங்களை பார்ப்பது கடுமையான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காவல்துறையும் இது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. மறுபுறம் ஆபாச படம் பார்ப்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்கிற போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பவர்களை குறி வைத்து காவல்துறையினரின் பெயரை பயன்படுத்த சிலர் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம்தான் கோவையில் நடந்திருக்கிறது. கோவையில் உள்ள ஓரு தனியார் கல்லூரியில் சபரி எனும் இளைஞர் பயின்று வருகிறார். இவருக்கு தொடக்கம் முதல் கல்வியில் அதிக ஆர்வம் இல்லை. எனவே மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். மற்ற சில இளைஞர்களும் சபரியுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றனர். இவர்கள் ஜாலியாக இருக்க பணம் தேவைப்பட்டிருந்திருக்கிறது. பெற்றோர்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.

எனவே இவர்கள் திட்டம் ஒன்றை போட்டியிருக்கிறார்கள். அதன்படி, 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் செல்போன் எண்களை சேகரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு போன் செய்து, “போலீஸ் பேசுறோம். நீ ஆபாச படம் பார்ப்பது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்திருக்கு. நடமாடும் நீதிமன்றம் மூலம் இது தொடர்பான விசாரணை வர இருக்கிறது” என்று மிரட்டியுள்ளனர். இப்படி மிரட்டும போது தவறாமல் வாக்கி டாக்கி சத்தத்தையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இது தொடக்கத்தில் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க குறிப்பிட்ட அளவு பணத்தை கேட்டிருக்கிறார்கள்.

இப்படியாக பல இளைஞர்களிடம் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களிடத்தில் சபரி குரூப் வேலையை காட்ட தொடங்கியிருக்கிறது. ஆனால் பல நாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்பதைபோல, சபரி குரூப் மீது சக இளைஞர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே அவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளித்திருக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *