ஆபத்துக்கு உதவும்.. டயர்களுக்கு பயன்படுத்தும் பஞ்சர் திரவம்.. எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

அதிக தூரம் பயணம் செய்யும் நபர்களுக்கு பெரும் சோதனையாக இருப்பது டயர் பஞ்சர் தான். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது, டயர் பஞ்சர் ஆகிவிட்டால், என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த சூழல்களை தவிர்க்க தான் பஞ்சர் திரவம் பயன்படுத்தப்படுகிறது. வாகனங்களின் செல்லும்போது, டயரில் ஏதேனும் சிறு துளை ஏற்பட்டால், இந்த பஞ்சர் திரவம் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. இது ஒரு தற்காலிக தீர்வு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே நிரந்தர தீர்வு என்று இருந்துவிடக் கூடாது.

பொதுவாக நாம் வாகனங்களின் செல்லும்போது கூரான ஆணி போன்ற பொருள்களால் டயரில் ஏதேனும் துளை விழுந்தால், அதனை பஞ்சர் என்று குறிப்பிடுகிறோம். இதனால் டயரில் உள்ள காற்று வெளியாகி வாகனத்தை செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் டயரில் நாம் பஞ்சர் திரவம் நிரப்பி இருந்தால், பஞ்சர் ஏற்பட்ட இடங்களில் திரவம் வந்து நிரம்பி காற்றை வெளியேற விடாமல் தடுக்கும்.

இதன் காரணமாக வாகனத்தை நாம் தொடர்ந்து ஓட்டிச்சென்று, டயர் பழுது பார்க்கும் கடைகளை அணுகி பஞ்சரை சரி செய்து கொள்ளலாம். சிறிய துளை கொண்ட பஞ்சர்களை இந்த திரவம் தானாக சரிசெய்து விடும். ஆனால், கூரான பெரிய ஆணி போன்ற பொருள்களால் ஏற்பட்ட பஞ்சரை நாம் சரியான முறையில் பழுது பார்க்க வேண்டும். இல்லையென்றால், மற்றொரு தினம் இது நம் பயணத்திற்கு தடையாக வந்து நிற்கும்.

டயர் பஞ்சர் திரவத்தை எப்படி பயன்படுத்துவது?

முதலில் நம் வாகன டயரில் உள்ள காற்றினை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து டயரின் அளவுக்கு ஏற்ற பஞ்சர் திரவத்தை வாங்கி, காற்று செலுத்தும் வால்வு வழியாக பஞ்சர் திரவத்தை உள்ளே செலுத்தவும். திரவம் முழுமையாக செலுத்திய உடன், டயருக்கு ஏற்ற அளவிலான காற்றை நிரப்ப வேண்டும்.

டயர் பஞ்சர் திரவம் நம்மை எப்படி பாதுகாக்கிறது?

நம்மை அறியாது சிறு துவாரங்கள் வழியாக டயரில் உள்ள காற்று வெளியேறும். பயணங்களின் போது இப்படி வெளியேறும் காற்றினால், டயர் சேதமடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, கண்ணுக்குத் தெரியாத சிறிய துவாரங்களை இந்த பஞ்சர் திரவம் பார்த்துக் கொள்ளும். இவை 4 முதல் 6 மில்லிமீட்டர் வரையிலான பஞ்சர்களை சரிசெய்யும் என்று கூறப்பட்டாலும், பெரிய பஞ்சர் இருந்தால், டயரை தக்க சமயத்தில் பழுது பார்க்க வேண்டும். இது ஒரு நிரந்தர தீர்வு என்று மட்டும் வாகன ஓட்டுநர்கள் இருந்துவிடக் கூடாது.

எங்கு கிடைக்கும்?

தற்போது பிரபலமாகி வரும் இந்த பஞ்சர் திரவம், பெரும்பாலான அனைத்து டயர் கடைகள், வாகன உபகரணங்கள் விற்கும் இடங்கள், டயர் பழுது பார்க்கும் இடங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ.200 முதல் 300 ரூபாய் வரை இருக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *