தீராத பிரச்சினைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள் இதோ!!
பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பிரச்சினைகள் வரும். இன்னும் சொல்ல போனால், பிரச்சனையே இல்லை என்று சொல்லும் மனிதன் இந்த உலகில் இல்லை என்றே சொல்லலாம். கர்ம வினைகளைத் தீர்க்கவே மனிதப்பிறவி கொடுக்கப்பட்டது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மனிதனும் பிரச்சனையும் இரட்டை பிறவிகள் போல இருப்பதால், அதை ஒருபோதும் பிரிக்கவே முடியாது.
அந்தவகையில், மனிதனுக்கு பிரச்சினைகளால் ஏற்படும் துன்பங்களை போக்க பரிகாரங்கள் உதவும். எனவே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதைக் குறித்து நாம் இங்கே தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…
பிரச்சனைகளும் அதற்கான பரிகாரங்கள் இங்கே..
கணவன் – மனைவி பிரச்சனை: இந்த பிரச்சனையுள்ள மனிதன் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானுக்கு விளக்கில் நெய் ஊற்றி கற்கண்டு போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அதுபோல், வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் தம்பதிகள், வெள்ளிக்கிழமை அன்று, இரண்டு நாகங்கள் பின்னியிருக்கும் நாகராஜா சிலைக்கு, மஞ்சள், குங்குமம் வையுங்கள், பிறகு செவ்வரளி பூ கொண்டு பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீரும்.
குடும்பப் பிரச்சனை: இந்த பிரச்சினை உள்ளவர்கள், அருகில் இருக்கும் எந்த கோவிலுக்கும் சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், குடும்ப பிரச்சனைகளால் ஏற்பட்ட மனக்கவலை உடனே தீரும். அதுபோல் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
கடன் பிரச்சனை: நீங்கள் தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், யோக நரசிம்மரை வணங்குங்கள். அதுபோல், சிறிதளவு கடன் பிரச்சனை இருந்தால் லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். முக்கியமாக, நரசிம்மரை திருக்கோலத்தைப் பார்த்தால், திருமணத்தடை பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் உடனே தீரும்.
செய்வினைப் பிரச்சனை: இந்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஏதாவது ஒரு கோயிலில் இருக்கும் திரிசூலத்தில் எலுமிச்சை பழம் குத்தி, குங்குமப் பொட்டு வைத்து வழிபாடு செய்யுங்கள். இதனால் செய்வினை மற்றும் கண் திருஷ்டி நீங்கும்.
தொழில் பிரச்சனை: வியாபாரம் மற்றும் தொழிலில் வளர்ச்சி அடைய, சங்கர தாழ்வார் சன்னதிக்குச் சென்று, 12 நெய் தீபமேற்றி, 48 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். அதுபோல், 21 செவ்வாய்க்கிழமையும் நெய் தீபம் ஏற்றினால் கொடுத்த கடன்கள் திரும்ப வரும்.
வழக்குப் பிரச்சனை: நீங்கள் இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சிவன் கோவிலில் இருக்கும் வில்வ மரம் மற்றும் வன்னி மரம் என இரண்டையும் 21 முறை உங்கள் குறைகளைச் சொல்லி சுற்றி வாருங்கள். இதனால் உங்களுக்கு விரைவில் நன்மை உண்டாகும்.
நோய் பிரச்சனை: தீராத நோயால் கஷ்டப்படுகிறீர்களா?.. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் சேர்ந்து காட்சி தரும் சிவனையும் வழிபடுங்கள். இதனால் உங்கள் நோய்கள் நீங்கும். அதுபோல், சனியின் பாதிப்புகள் குறைய, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவன் கோயிலுக்குச் சென்று பாலாபிஷேகம் செய்யுங்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு சனிக்கிழமையும், சனிபகவானுக்கு தேங்காய் உடைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.