360 டிகிரி கேமரா வசதியுடன் குறைந்த விலையில் கிடைக்கும் 5 கார்களின் லிஸ்ட் இதோ..!

தற்போது வரக்கூடிய நவீன கார்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல வசதிகள் உள்ளது. அதில் ஒன்றுதான் 360 டிகிரி கேமரா. முன்பெல்லாம் அதிக விலையுள்ள ப்ரீமியம் ரக கார்களில் மட்டுமே இந்த வசதி இருக்கும். ஆனால் தற்போது ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள பல கார்களிலும் 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இந்த பதிவில் 360 டிகிரி கேமரா வசதி கொண்டுள்ள ரூ.15 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள பிரபலமான ஐந்து கார்களைப் பற்றியே பார்க்கப் போகிறோம்.

மாருதி சுசுகி பலேனோ : விற்பனையில் முன்னணியில் இருக்கும் பலேனோ கார், மாருதி நிறுவனத்தின் நெக்ஸா ப்ரீமியம் ரிடெய்ல் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 போன்றவை இக்காரின் போட்டியாளராகும். சிறந்த ஹேட்ச்பேக் காரான பலேனோவின் உச்சபட்ச மாடலான ஆல்ஃபா ட்ரிமில் 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இக்காரின் விலை ரு.9.38 லட்சமாகும்.

டாடா நெக்ஸான் : இந்திய பயணியர் வாகனங்களில் சிறந்த விற்பனையாகும் காராக காம்பேக்ட் SUV நெக்ஸான் திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பிரிவு வாகனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் SUV கார் மீது மக்களிடம் அதிகரித்துள்ள வரவேற்பு. பல சிறப்பம்சங்களுடம் அப்டேட் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் 2023-ம் ஆண்டு அறிமுகமானது. உலகளாவிய NCAP விபத்து பரிசோதனையில் ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ள நெக்ஸான் காரின் க்ரீயேடிவ்+ வெர்ஷனில் 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இக்காரின் விலை ரு.11.80 லட்சமாகும்.

கியா சோனெட் : காம்பேக்ட் SUV பிரிவிலேயே அதிக வசதிகளைக் கொண்ட கியா சோனெட் காருக்கு போட்டியாக டாடா நெக்ஸான், மாருதியின் பிரெஸ்ஸா, ஹூண்டாய் வீனியூ ஆகிய கார்கள் திகழ்கின்றன. இந்தக் காரில் உள்ள 360 டிகிரி கேமரா மூலம் வாகனத்தை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் ஓட்டுனரால் கவனிக்க முடியும். கியா சோனெட்டின் GTX+ மாடலில் இந்த வசதி உள்ளது. இதன் விலை ரூ.14.49 லட்சமாகும்.

மாருதி சுசுகி ஃப்ரான்ஸ் : 2023-ம் ஆண்டு அறிமுகமான ஃப்ரான்ஸ் கார் பலேனோவின் க்ராஸ் ஓவராகும். ஒருவகையில் பலேனோவின் சகோதரன் என்றுக்கூட ஃப்ரான்ஸ் காரை சொல்லலாம். இந்தக் காரும் மாருதி நிறுவனத்தின் நெக்ஸா ப்ரீமியம் ரிடெய்ல் நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஃப்ரான்ஸ் காரின் உச்சபட்ச மாடலான ஆல்ஃபா ட்ரிமில் 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் இஞ்சினில் இயங்கும் இந்தக் காரின் விலை ரூ.11.47 லட்சமாகும்.

மாருதி சுசுகி பிரெஸ்ஸா : டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வீனுயூ போன்ற கார்கள் இருக்கும் அதேப்பிரிவில்தான் மாருதி சுசுகியின் பிரெஸ்ஸாவும் உள்ளது. சிறந்த காம்பேக்ட் SUV காரான பிரெஸ்ஸாவின் வருகைக்குப் பிறகே மாருதி நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. ஓட்டுனருக்கு மிகவும் உபயோகமுள்ள 360 டிகிரி கேமரா இந்தக் காரின் உச்சபட்ச மாடலான ZXI+ ட்ரிம் மாடலில் உள்ளது. இந்தக் காரின் விலை ரு.12.58 லட்சமாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *