சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட 5 எஸ்யூவி கார்களின் பட்டியல் இதோ..!
இந்தியாவில் பயணிகள் வாகனத்துறை (passenger vehicle industry) இப்போது 2 புதிய ட்ரெண்டுகளை கண்டு வருகிறது. ஒன்று முன்னெப்போதும் இல்லாத அளவில் ஸ்போர்ட் யூட்டிலிட்டி வெஹிகிள் எனப்படும் SUV செக்மென்ட்டின் வளர்ச்சி. மற்றொன்று தாங்கள் வாங்க நினைக்கும் கார்களில் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் குறித்து வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு.
இதனை கருத்தில் கொண்டு இந்தியா இப்போது பாரத் என்சிஏபி என குறிப்பிடப்படும் வாகனப் பாதுகாப்பு சோதனைத் திட்டத்தை சொந்தமாக கொண்டுள்ளது. நமது நாட்டில் விற்கப்படும் பல கார்கள் குளோபல் நியூ கார் அசெஸ்மென்ட் ப்ரோகிராம் எனப்படும் Global NCAP மூலம் பரிசோதிக்கப்பட்டது. SUV செக்மென்ட்டானது பேஸஞ்சர் வெஹிகிள் மார்க்கெட்டில் 50% விற்பனை பங்கை எட்டியுள்ள நிலையில், Global NCAP-ஆல் பரிசோதிக்கப்பட்டு மிக உயர்ந்த சேஃப்டி ரேட்டிங்கை கொண்டு இந்தியாவில் விற்பனையாகும் 5 SUV-க்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்.
டாடா ஹாரியர் (Tata Harrier): புதிய டாடா ஹாரியரானது Global NCAP-ல் பெரியவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவு என இரண்டிலும் சஃபாரி எஸ்யூவி பெற்ற ஸ்கோர்களையே பெற்றுள்ளது. அதே போல இந்த இரண்டு எஸ்யூவி-க்களுமே உள்நாட்டு வாகனப்பாதுகாப்பு சோதனை திட்டமான Bharat NCAP-யிலும் 5 ஸ்டார் சேஃப்ட்டி ரேடிங்கையே பெற்றுள்ளன. ஹாரியர் எஸ்யூவி-யின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.15.49 லட்சம் முதல் ரூ.26.44 லட்சம் வரை பெற்றுள்ளன.
டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்த பட்டியலில் மூன்றாவது இடம்பெற்றிருப்பதும் டாடா கார் தான். Global NCAP-ல் இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என 2 பிரிவுகளிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. இந்த கார் அடல்ட் ப்ரொட்டக்ஷனில் 32.22 பாயிண்ட்ஸ்களும், சைல்ட் ப்ரொட்டக்ஷனில் 44.52 பாயிண்ட்ஸ்களும் பெற்றுள்ளது. நெக்ஸானும் கூட 6 ஏர்பேக்ஸ் மற்றும் ESC-ஐ ஸ்டாண்டர்டாக கொண்டு வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.15 லட்சத்தில் தொடங்கி ரூ.15.60 லட்சம் வரை செல்கிறது.
வோக்ஸ்வேகன் டைகன் (Volkswagen Taigun): இந்த கார் Global NCAP-ன் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என 2 பிரிவுகளிலும் 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு, 29.64 புள்ளிகளைப் பெற்றாலும் கூட குழந்தைகளுக்கான பாதுகாப்பை பொறுத்த வரை 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலே நாம் பார்த்த சஃபாரி, ஹாரியர் மற்றும் நெக்ஸான் ஆகியவை 6 ஏர்பேக்ஸ் மற்றும் ESC ஸ்டாண்டர்டாக இருந்தாலும், Taigun காரானது ESC உடன் 2 ஏர்பேக்ஸ்களை மட்டுமே ஸ்டாண்டர்டாக பெற்றிருக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.70 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை உள்ளது.
ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq): Global NCAP-ல் நாம் மேலே பார்த்த வோக்ஸ்வேகன் டைகன் ரேட்டிங்கிற்கு நிகரான ரேட்டிங்கை ஸ்கோடா குஷாக் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34-க்கு 29.64 பாயிண்ட்ஸ்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49-க்கு 42 பாயிண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. Taigun மற்றும் Kushaq இரண்டுமே ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா-ஸ்பெசிஃபிக் MQB-AO-IN பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டவை. குஷாக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.89 லட்சம் முதல் ரூ.20.49 லட்சம் வரை செல்கிறது.