வியர்வையில் வரும் துர்நாற்றத்தை துரத்துவதற்கு சிறந்த தீர்வு இதோ..!
பொதுவாகவே அனைவருக்கும் வியர்வை நாற்றம் என்பது ஒரு தொல்லையாகவே இருக்கும். வெயில் காலம் வந்துவிட்டாலே பலரும் பயப்படும் விஷயம் வியர்வைதான்.
நம்மில் பலர் சுத்தமாகத்தான் குளிக்கிறேன். ஆனால் ஏன் இப்படி துர்நாற்றம் வீசுகிறது என்று கவலைப்படுபடுவார்கள்.
நறுமணமிக்க சவர்க்காரம் போட்டு குளித்தால் மட்டும் வியர்வை நாற்றமானது நீங்குவது இல்லை. இயற்கையான முறையில் ஒரு சில முயற்சிகளை எடுப்பதும் நல்லது.
வியர்வை நாற்றமடிப்பதற்கான காரணம் என்ன?
வியர்வையில் கொழுப்பு, புரதங்களுடன் பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது.
துர்நாற்றம் வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?
அதிக அளவிலான சுகாதாரப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
வியர்வைக் கிருமிகள் சருமத்தை பாதிக்காமல் இருப்பதற்கு சிறந்த சவர்க்காரத்தை பயன்படுத்தலாம்.
குளித்தவுடன் அரைகுறையாக துடைத்துவிட்டு ஆடைகளை அணியாமல், நன்கு காயந்தவுடன் அணியலாம்.
பருத்தி ஆடைகள், லூஸாக இருக்கும் ஆடைகளை அணியுங்கள்.
தினமும் குளிக்கும் போது தண்ணீருடன் எழுமிச்சை சாற்றை சேர்த்து குளிக்கலாம்.
சந்தனக் கட்டை நீரில் குழைத்து அக்குளில் இரவு தூங்கும் போது தினமும் பூசலாம்.
தினமும் குளிப்பதற்கு முன்பு, தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து அக்குளில் பூசலாம்.
கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் துர்நாற்றம் நீங்கும்.